இந்திய அணியில் இவரது பவுலிங் மிரட்டலாக இருந்தது ; ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி-20 லீக் போட்டிகள் இன்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு சற்று தாமதம் ஆனது. அதனால் 20 ஓவர் போட்டியை 8 ஓவராக குறைந்தனர்.

இதில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை தொடர்ந்து விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா வீரர் 8 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 90 ரன்களை விளாசினார்கள்.

அதில் ஆரோன் பின்ச் 31, கிறீன் 5, மேக்ஸ்வெல் 0, டிம் டேவிட் 2, வெட் 43, ஸ்டீவ் ஸ்மித் 8 ரன்களை அடித்தனர். பின்பு 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. முதலில் பேட்டிங் செய்த ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் அதிரடியான ஆட்டத்தை தொடங்கினர்.

பின்பு கே.எல்.ராகுல், விராட்கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவானது. இருப்பினும் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். அதுமட்டுமின்றி இறுதி ஓவரில் 9 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை இந்திய கிரிக்கெட் அணிக்கு இருந்தது.

அப்பொழுது தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான பவுண்டரிகளால் இந்திய அணி வெற்றி பாதைக்கு கொண்டு சென்றது. அதனால் 4 பந்துகள் மீதமுள்ள நிலையில் 6 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய. இப்பொழுது இரு அணிகளும் 1 – 1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.

நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் வெல்லும் அணி தான் தொடரை கைப்பற்ற போகின்றனர். போட்டி முடிந்த பிறகு பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான ஆரோன் பின்ச் கூறுகையில் ; “போட்டி தொடங்குவதற்கு தாமதமானதை பார்த்தால் 5 ஓவர் போட்டியாக தான் இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம்.”

“ஆனால் அதைவிட கொஞ்சம் அதிகமாக இருந்தது. இருப்பினும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக பேட்டிங் செய்தார். அதுமட்டுமின்றி அக்சர் பட்டேல் பவுலிங் செய்த இரு ஓவர்கள் தான் எங்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் எங்கள் அணியின் விக்கெட் கீப்பரான மாத்தியூ வெட் இப்பொழுதெல்லாம் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அதுவும் பினிஷராக. அதுமட்டுமின்றி ஆடம் சம்பா பவுலிங்கும் சிறப்பாக இருந்தது என்று கூறியுள்ளார் ஆரோன் பின்ச்.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here