எனக்காக இதை மட்டும் செய்யுங்கள் ; நான் அதிரடியாக பேட்டிங் செய்வேன் ; சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக் ;

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி-20 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு டி-20 போட்டிகளில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருக்கின்றனர்.

இரண்டாவது போட்டியின் முழு விவரம் :

நேற்று இரவு 7:30 மணியளவில் தொடங்க வேண்டிய டி-20 போட்டி ஈரப்பதம் அதிகமாக இருந்த காரணத்தால் போட்டி தொடங்குவதற்கு சற்று தாமதம் ஆனது. பின்பு 8:30 மணியளவில் தொடங்கியது போட்டி. ஆனால் நேரம் குறைவாக இருந்த காரணத்தால் 20 ஓவர் போட்டிக்கு பதிலாக 8 ஓவர் போட்டியாக மாற்றியுள்ளனர்.

அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டம் பெரியளவில் அமையவில்லை என்பது தான் உண்மை. க்ரீன், மேக்ஸ்வெல் மற்றும் டிம் டேவிட் போன்ற வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர்.

அதனால் ரன்களை அடிக்க முடியாமல் திணறியது ஆஸ்திரேலியா அணி. இருப்பினும் கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் விக்கெட் கீப்பர் மாத்தியூ வெட் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் ரன்களை விளாசினார்கள். என்னதான் முதலில் தொடர்ந்து விக்கெட்டை இழந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி 90 ரன்களை அடித்தனர்.

பின்பு 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. ஆஸ்திரேலியா அணியை போலவே விராட்கோலி, கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர். அதனால் இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தது.

இருப்பினும் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் வெற்றியை கைப்பற்றியது இந்திய. இரு ஓவர் வரை விளையாடிய இந்திய 4 பந்து மீதமுள்ள நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. அதனால் நாளை நடைபெற உள்ள போட்டியில் வெல்லும் அணி தான் தொடரை கைப்பற்ற போகின்றனர்.

நேற்று போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் சூரியகுமார் யாதவ் கூறுகையில் ; “இந்திய அணியில் தொடர்ந்து பயணம் செய்வது சிறப்பாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி என்னால் முடிந்தவரை நான் கடினமாக உழைத்து கொண்டு தான் வருகிறேன். நான் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய தயாராக தான் இருக்கிறேன்.”

“இருப்பினும் நான்காவதாக களமிறங்கினால் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் அப்பொழுது தான் போட்டி எந்த நிலையில் இருக்கிறது என்று புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப விளையாட முடியும். அதுமட்டுமின்றி எனக்கு போட்டியின் அழுத்தத்தில் விளையாடுவது தான் பிடிக்கும்.”

“இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அங்கு நாம் எப்படி ஷாட்ஸ்-ஐ தேர்வு செய்து விளையாடுகிறோம் என்பதில் தான் ஆட்டம் உள்ளது. மற்றபடி அனைத்து விஷயங்களும் ஒன்று தான் என்று கூறியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.”