ரிஷாப் பண்ட் -க்கு பதிலாக தினேஷ் கார்த்திக்- ஐ களமிறக்கியத்திற்கு காரணம் இதுதான் ; அவரை பற்றி அதிகம் பேச விரும்பவில்லை ; ரோஹித் சர்மா பேட்டி ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த இரு போட்டிகளில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளனர். நாளை நடைபெற உள்ள போட்டியில் வாழ்வா ? சாவா ? ஆட்டமாக தான் இருக்கும்.

இரண்டாவது போட்டியின் சுருக்கம் :

நேற்று இரவு 8:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதுமட்டுமின்றி, 7:30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி தாமதமாக தொடங்கிய காரணத்தால் 20 ஓவருக்கு பதிலாக 8 ஓவர் போட்டியாக மாறியுள்ளனர்.

அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியின் நம்பிக்கை நாயகன் கிறீன் வெறும் 5 ரன்களில் ஆட்டம் இழந்தது ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவானது. அதுமட்டுமின்றி, மேக்ஸ்வெல் மற்றும் டிம் டேவிட் போன்ற தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஆனால் ஆரோன் பின்ச் மற்றும் மாத்தியூ வெட் இருவரின் அதிரடியான பார்ட்னெர்ஷிப் காரணத்தால் 8 ஓவர் முடிவில் 90 ரன்களை அடித்தனர். அதில் பின்ச் 31, கிறீன் 5, மேக்ஸ்வெல் 0, டிம் டேவிட் 2, மாத்தியூ வெட் 43, ஸ்டீவன் ஸ்மித் 8 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 91 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.

தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாட தொடங்கினார்கள். ஆனால் கே.எல்.ராகுல் விக்கெட்டை இழந்த பிறகு விராட்கோலி மற்றும் சூரியகுமார் ஆகிய இருவரின் விக்கெட்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோனது.

அதனால் இந்திய அணிக்கு பின்னடைவானது. இருப்பினும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டம் இந்திய கிரிக்கெட் அணி 7.2 ஓவர் முடிவில் 92 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வென்றுள்ளது. அதனால் 1 – 1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.

ரோஹித் சர்மாவின் பேட்டி :

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூறுகையில் : ” இந்த போட்டி எனக்கே ஆச்சரியமாக தான் இருக்கிறது. இந்த மாதிரி விளையாடுவேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. எனக்கு தெரிந்து கடந்த 8 -9 மாதங்களாக இப்படி தான் விளையாடுகிறேன். அதுமட்டுமின்றி இது மிகவும் சிறிய போட்டி அதனால் பெரிய அளவில் யோசிக்க முடியாது.”

“உண்மையிலும் பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்துள்ளனர். இருப்பினும் ஹர்ஷல் பட்டேல் அதிகப்படியான டாஸ் பந்துகளை வீசுகிறார். காயத்திற்கு பிறகு மீண்டு வர சில நேரங்கள் ஆகும். அதனால் அவரது பவுலிங்கை பற்றி நான் பேசவில்லை. அதுமட்டுமின்றி, ஒரு அணியாக அதிகமாக யோசிக்கப்போவது இல்லை.”

“இப்பொழுது அக்சர் பட்டேல் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பவுலிங் செய்ய கூடிய நிலையில் இருக்கிறார். அதனால் மற்ற பவுலர்களை எப்பொழுது வேண்டுமானாலும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றுவேன். அக்சர் பட்டேல் பவுலிங் ஓக்கே. ஆனால் அவரது பேட்டிங்-கை பார்க்க ஆசைப்படுகிறேன்.”

“அதுமட்டுமின்றி இறுதியாக ரிஷாப் பண்ட் -ஐ பேட்டிங் செய்யவிடாமல் என்று தான் நினைத்தேன். ஆனால் ஆஸ்திரேலியா பவுலிங்-கில் சாம்ஸ் தான் பவுலிங் செய்ய போகிறார் என்று தெரிந்தவுடன் உடனடியாக நான் தினேஷ் கார்த்திக் வந்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். அதேபோல சிறப்பாக விளையாடி போட்டியை முடித்துவிட்டார் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here