CSK, MI அணியால் கூட முடியாத ?இவர் மட்டும் ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்றிருந்தால் ஒரு அணியால் கூட இவரை வாங்கியிருக்க முடியாது ;

0

ஐபிஎல் 2023: இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாக தான் ஐபிஎல் டி-20 திகழ்கிறது. இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் 16வது சீசன் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தொடங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு தான் ஐபிஎல் 2022ல் புதிதாக லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போன்ற இரு அணிகள் அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. மொத்தம் 10 அணிகளை கொண்டு இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டுமென்றால் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிருக்க வேண்டும். அப்பொழுது தான் குறைந்தபட்ச விலைக்கு ஏதாவது அணியில் இடம்கிடைக்க வாய்ப்புகள் இருக்கும். அதே ஒரு வெளிநாட்டு வீரர் ஏதாவது ஒரு தொடரில் சிறப்பாக விளையாடிருந்தால் போதும், அவருக்கு அதிக விலை கொடுக்க அனைத்து அணிகளும் போட்டியிடும்.

அதேபோல தான் டிசம்பர் 23ஆம் தேதி அன்று நடைபெற்ற மினி ஏலமும். ஆமாம், அதில் சாம் கரன் , பென் ஸ்டோக்ஸ் மற்றும் கேமரூன் க்ரீன் போன்ற வீரர்களை அதிக விலை கொடுத்து மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கின்ஸ்க் அணி கைப்பற்றியுள்ளது.

சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் சில முக்கியமான தகவலை பற்றி பேசியுள்ளார். அதில் “இந்திய அணிக்கு எதிரான டி-20 போட்டியில் இலங்கை கேப்டனான ஷனாக பேட்டிங் செய்த விதம் அப்படி இருந்தது. நிச்சியமாக இப்பொழுது மட்டும் ஐபிஎல் ஏலம் நடைபெற்றிருந்தால் அதிக விலை இவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கும்.”

“மினி ஏலத்திற்கு முன்பு (இந்திய மற்றும் இலங்கை) அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெற்றிருந்தால் இவரை விலைக்கு வாங்க பல அணிகளிடம் காசு இருந்திருக்காது என்று கூறியுள்ளார் கம்பிர்.”

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டியில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருக்கின்றனர். அதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணிதான் தொடரை கைப்பற்ற போகின்றனர்.

கம்பிர் சொன்னது போல், இரு போட்டிகளில் விளையாடிய இலங்கை அணியின் கேப்டன் மற்றும் ஆல் – ரவுண்டரான ஷனாக 45,56 ரன்களை அடித்துள்ளார். அதே சமையத்தில் 2 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here