இந்திய அணியில் இப்படி ஒரு பேட்ஸ்மேன் உள்ளாரா ? பட்டைய கிளப்பிவிட்டார் ; ஜோஸ் பட்லர் பேட்டி ;

இந்திய மற்றும் இங்கிலாந்து தொடர் போட்டிகள் :

சில தினங்களுக்கு முன்பு தான் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. அதில் போட்டிகள் ட்ராவில் முடிந்தது. அதனால் எப்படியாவது டி-20 போட்டிக்கான தொடரில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று சிறப்பாக விளையாடியது இந்திய. ஆமாம், அதனால் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய.

மூன்றாவது டி-20 போட்டி:

மூன்றாவது டி-20 போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சிறப்பாக அமைந்தது.

ஒரு பின் ஒருவராக மாறி மாறி ரன்களை அடித்து வந்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 215 ரன்களை அடித்தது இங்கிலாந்து அணி. அதில் ஜேசன் ராய் 27, ஜோஸ் பட்லர் 18, டேவிட் மலன் 77, லிவிங்ஸ்டன் 42 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

இந்திய அணியின் பேட்டிங் :

இந்திய அணி 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது. தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாமல் ஆட்டத்தை இழந்தாலும், சூரியகுமார் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் இறுதி நேரத்தில் எதிர்பாராத விதமாக ஆட்டத்தை இழந்தார் சூரியகுமார் யாதவ். அதனால் இந்திய அணியால் 198 ரன்களை அடிக்க முடிந்தது. அதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை பெற்றது இந்திய. இதில் ரோஹித் சர்மா 11, ரிஷாப் பண்ட் 1, விராட்கோலி 11, சூரியகுமார் யாதவ் 117, ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களை அடித்துள்ளனர்.

தொடர் முடிவு :

மொத்தம் மூன்று டி-20 போட்டிகளில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.

ஜோஸ் பட்லர் பேட்டி:

“இது ஒரு சிறப்பான போட்டியாக மாறியுள்ளது. சத்தியமாக நான், இங்கிலாந்து அணி அடித்த ரன்கள் குறைவாக தான் நினைத்தோம். ஆனால் சத்தியமாக இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் இப்படி விளையாடுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.”

“அதுமட்டுமின்றி எங்கள் அணியின் பவுலர் டொப்லெ சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட்டை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி க்ளீசோன் சிறப்பாக விளையாடியது சிறப்பாக உள்ளது. அதேபோல தான் கிறிஸ் ஜோர்டானும் சிறப்பாக பவுலிங் செய்தார். எங்கள் அணியில் பல வீரர்கள் உள்ளனர்.”

“அந்த நேரத்தில் மொயின் அலி மட்டும் தான் நாங்கள் நினைத்த வீரர், எங்களுக்கும் வேறு வழியில்லை. அதிகப்படியான ஆல் – ரவுண்டர் எங்கள் அணியில் உள்ளனர். இந்த டி-20 தொடர் முழுவதும் கிறிஸ் ஜோர்டன் முக்கியமான ஓவரில் பவுலிங் செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.”