இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ரன்களை அடித்து தொம்சம் செய்தனர்.
முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டை இழந்த இந்திய அணி 357 ரன்களை அடித்தனர். இருப்பினும் இன்னும் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் ஆட்டம் இழக்கலாம் விளையாடி வந்துள்ளனர். இரண்டாவது நாள் முடிவில் நிச்சியமாக இந்திய அணி குறைந்தது 400 ரன்களை அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில முக்கிமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ” நான் டெஸ்ட் போட்டியில் விளையாடிய தொடங்கிய நாள் முடிவு செய்தேன், 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் நானாக தான் இருக்க வேண்டுமென்று.
“அதுவும் நடந்தது, பின்னர் இஷாந்த் சர்மா அதனை செய்தார். இப்பொழுது விராட்கோலி 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். நான் தான் விராட்கோலியை ரஞ்சி கோப்பை போட்டிகளில் கேப்டனாக நியமனம் செய்தேன். விராட்கோலி விளையாடியதை நான் கவனித்துள்ளேன்.”
“விராட்கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி புதிய ஒரு உயரத்தை எட்டியுள்ளது தான் உண்மை. எப்படி ஹோலி பண்டிகையில் மக்கள் அனைவரும் உற்சாகமாக விளையாடுகிறார்களோ, அதேபோல தான் விராட்கோலி பேட்டிங், அவர் விளையாட தொடங்கினால் போது அதனை ஓட்டுமொத்த இந்தியாவும் அதனை கவனிக்கும்.”
“அதுமட்டுமின்றி, இன்னும் அவரது பிட்னெஸ் மற்றும் அவர் ரன்களை அடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அவரிடம் பார்க்க முடிகிறது. கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் புதிய உச்சத்தை எட்டியுள்ளார். இந்திய அணிக்காக விளையாடி பல போட்டிகளில் வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். அவரது விளையாட்டுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக்”.
சமீபத்தில் தான விராட்கோலிக்கும் பிசிசிஐ-க்கும் இடையே ஏற்பட்ட கேப்டன் விவகாரம் இப்பொழுது தான் ஓய்ந்துள்ளது. பின்னர் வெறும் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக மட்டுமே விளையாடி வந்தார் விராட்கோலி. ஆனால் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி தோல்வியை பெற்ற பிறகு இப்பொழுது அவர் (விராட்கோலி) வெறும் ஒரு வீரராக விளையாடி வருகிறார்.
விராட்கோலியின் 100 வது டெஸ்ட் போட்டிக்கு வாழ்த்துக்கள். கிரிக்கெட் ரசிகர்களே விராட்கோலி-க்கு ஒரு வாழ்த்துக்களை கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!