விராட்கோலி இதை செய்துவிட்டார் ; அதனால் ரோஹித் ஷர்மாவுக்கு எந்த கவலையும் இல்லை ; முன்னாள் வீரர் ஓபன் டாக் ;

0

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான போட்டிக்கும் கேப்டனாக பதிவு ஏற்றுள்ளார் இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா. அவர் கேப்டனாக பிறகு நடைபெற முதல் டெஸ்ட் போட்டி தான் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி.

நேற்று காலை 9:30 மணியளவில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 357 ரன்களை அடித்த நிலையில் 6 விக்கெட்டை இழந்துள்ளது இந்திய அணி.

இருப்பினும் இப்பொழுது இந்திய அணி இரண்டாவது நாளில் பேட்டிங் செய்ய தொடங்கியது இந்திய அணி. அதில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரும் அருமையாக விளையாடி வருகின்றனர். இப்பொழுது இந்திய அணி 440க்கு மேற்பட்ட ரன்களை அடித்த காரணத்தால் நிச்சியமாக இலங்கை அணிக்கு சவாலாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கிடையில் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் கூறுகையில் ; எனக்கு தெரிந்து டெஸ்ட் போட்டிக்கான அணியை வழிநடத்துவது ரோஹித் சர்மா பெரிய பிரச்சனையாக இருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் டெஸ்ட் போட்டிக்கான பவுலர்களை சரியாக வழிநடத்தி தயார் படுத்தி வைத்துள்ளார் விராட்கோலி.

அவர்களே போட்டியை வென்று விடுவார்கள். ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பும்ரா இவர்கள் உள்ளனர். தொடக்கத்தில் பேட்ஸ்மேன்கள் தேவை படும். ஆனால் போட்டியை வெல்லவதற்கு பவுலர்களே போதும். அதனால் ரோஹித் ஷர்மாவுக்கு டெஸ்ட் போட்டியில் எந்த பிரச்சனையும் இல்லை.

அதேநேரத்தில் புஜாரா மற்றும் ரஹானே பற்றி பேசினால், அவர்கள் இருவருக்கும் மாற்றாக ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹனுமா விஹாரி உள்ளனர். அதில் ஐயர் ஆரம்பித்த தொடக்க ஆட்டமே அவரது பேட்டிங் பற்றி பேசியுள்ளது என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பிர்.

இந்தியா கிரிக்கெட் அணியால் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்து போட்டியை வெல்ல முடியும். ஆனால் வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ளும்போது இதனை செய்வதர்ற்கு சில தடங்கல் ஏற்படலாம். அதில் இந்திய அணி முதலில் பேட்டிங் பிடித்து அதிக ரன்களை அடிக்க வேண்டியது கட்டாயம் என்று கூறியுள்ளார் கம்பிர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here