வான்கடே : நேற்று மதியம் 1:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோதின.
அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை.
இருப்பினும் மிச்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதனால் 35.4 ஓவர் முடிவில் 188 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 81, ஸ்டீவன் ஸ்மித் 22, ஜோஷ் இங்கிலீஸ் 26 ரன்களை அடித்துள்ளனர்.
பின்பு 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு த்ரில் வெற்றி காத்திருந்தது. தொடக்க வீரர்களின் இருந்து சூரியகுமார் யாதவ் வரை பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல், ஹர்டிக் பாண்டிய மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் சேர்ந்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.
அதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வென்று 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கின்றனர். போட்டியின் வெற்றியை குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ஹர்டிக் பாண்டிய சில கருத்துக்களை கூறியுள்ளார்.
அதில் ” நாங்க போட்டி முழுவதும் அழுத்தத்தை மட்டுமே சந்தித்து கொண்டு வந்தோம். அதில் இருந்து எப்படி வெளிவர வேண்டுமென்று நாங்கள் ஆலோசித்து விளையாடினோம். குறிப்பாக பேட்டிங் பவுலிங் போன்ற இரு விஷயங்களும் சிறப்பாக விளையாடினோம்.”
“அதிலும் வெற்றியை கைப்பற்ற அனைத்து விதமான முயற்சிகளையும் நாங்கள் கையில் எடுத்து விளையாடினோம். குறிப்பாக ஜடேஜா மாற்றம் சுப்மன் கில் பிடித்த கேட்ச் மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் ஜடேஜா அவரால் என்ன முடியும் என்பதை நிரூபித்துவிட்டார்.”
“உண்மையிலும் கே.எல்.ராகுல் பார்ட்னெர்ஷிப் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. அதிலும் கே.எல்.ராகுல் மாற்றம் ஜடேஜா ஆகிய இருவரும் விளையாடிய விதம் எங்களுக்கு ஆறுதலாக அமைந்தது என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.”