இந்திய அணியில் இவர் இல்லாதது மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது ; இந்தியாவிற்கு வீக்னஸ் இதுதான் ; முன்னாள் வீரர் உறுதி ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதுவும் இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதால் அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் இப்பொழுது ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு போட்டியை பார்த்து வருகின்றனர். இருப்பினும் முதல் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா அணி வென்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது ஆஸ்திரேலியா.

முதல் போட்டியின் சுருக்கம் :

மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் செய்ய தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் தொடர்ந்து விக்கெட்டை இழந்தது இந்திய அணிக்கு பின்னடைவானது.

இருப்பினும், கே.எல்.ராகுல் , சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்டிக் பாண்டிய போன்ற வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் 208 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

19.2 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 211 ரன்களை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி. என்னதான் 200க்கு மேற்பட்ட ரன்களை அடித்தால் இந்திய அணி தொடர்ந்து தோல்விகளை மட்டுமே பெற்று வருகிறது. ஆமாம், ஆசிய கோப்பை போட்டியிலும் இந்திய அணியின் பவுலிங் மோசமான நிலையில் இருப்பதால் தொடர்ந்து தோல்வியை மட்டுமே பெற்று வருகிறது இந்திய.

இந்திய அணியின் முக்கியமான வீக்னஸ் பற்றி பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் :

இந்திய அணியின் வீக்னஸ் பற்றி கூறுகையில் ; ” இந்த பிரச்சனை நீண்ட நாட்களாகவே இந்திய அணியில் தொடர்ந்து வருகிறது.வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அணியில் இருந்தால் நிச்சியமாக இந்திய அணியால் பவுலிங் சிறப்பாக செய்து எதிர் அணியை கட்டுப்படுத்த முடியும். ஆனால், அவர் (பும்ரா) இல்லையென்றால் இந்திய அணி சுலபமாக 200க்கு மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.”

“இதற்கு உடனடியாக தீர்வு கண்டுபிடித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் இனிவரும் போட்டிகளில் நிச்சியமாக இந்திய அணிக்கு பின்னடைவாக தான் இருக்கும். இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக பும்ரா இருக்கிறார். அவரது பங்களிப்பு நிச்சியமாக ப்ளேயிங் 11க்கு தேவைப்படுகிறது.”

“உள்ளூர் போட்டிகளில் விளையாடுகிறாரோ இல்லையோ..! ஆனால் அனைத்து விதமான போட்டிகளில் இந்திய அணியில் விளையாட வேண்டுமென்று தான் அனைவரும் நினைக்கின்றனர். இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்தால் நிச்சியமாக வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருக்கும். ஆனால் இரண்டாவதாக பவுலிங் செய்யும்போது 16 முதல் 20 ஓவர் மிகவும் கவனமாக பவுலிங் செய்ய வேண்டியுள்ளது.” என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.