இந்திய அணியை பற்றி இந்த விஷயத்தில் கவலை இல்லை ; ஏனென்றால் ….! கங்குலி ஓபன் டாக் ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இருக்காது.

இதற்கிடையில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது ஆஸ்திரேலியா.

இன்னும் மீதமுள்ள இரு போட்டிகளில் இந்திய அணி வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்து இந்திய அணியின் பவுலிங் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதனால் தொடர்ந்து தோல்விகளை பெற்று வருகிறது இந்திய.

என்னதான் பேட்டிங்-கில் 200க்கு மேற்பட்ட ரன்களை அடித்தாலும் இந்திய அணியின் மோசமான பவுலிங் தான் தொடர் தோல்விக்கு முக்கியமான காரணமாக மாறியுள்ளது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே மிதமுள்ளது உலகக்கோப்பை போட்டிக்கு. அப்படி இருக்கும் நிலையில் இந்திய அணியில் இருக்கும் வீரர்களை வைத்து உலகக்கோப்பையை வெல்ல முடியுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரரான பும்ரா சமீப காலமாக காயம் ஏற்பட்டதால் இந்திய அணியில் விளையாட முடியாமல் போனது. அதனால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது தான் உண்மை. இந்நிலையில் இந்திய அணி ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2022 போட்டியில் எப்படி விளையாடும் ? இந்திய அணிக்கு இதுதான் பிரச்சனை என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பிசிசிஐ தலைவரான கங்குலி இந்திய அணியை பற்றி சில முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார். அதில் ” இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் ஷர்மாவிற்கு கீழ் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ரோஹித் சர்மாவின் வெற்றி சதவீதம் 80 உள்ளது.”

“இருப்பினும் ஒருசில போட்டிகளில் மட்டுமே தோல்வியை பெற்று வருகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மொத்தம் 35 போட்டிகளில் விளையாடி வெறும் 5 அல்லது 6 போட்டிகளில் தான் தோல்வியை பெற்றுள்ளது. இதனால் ஒரு பிரச்சனையும் இல்லை. நிச்சியமாக ரோஹித் சர்மா தலைமையில் அனைத்து தவறுகளும் சரியாகிவிடும். அதனால் இதனை பற்றி நான் கவலையே படமாட்டேன் என்று கூறியுள்ளார் கங்குலி.”

ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் கம்போ இந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை டி-20 போட்டியில் வெற்றியை கைப்பற்ற உதவியாக இருக்குமா ? இல்லையா ?