43வது போட்டியில் :
நேற்று மதியம் 3:30 மணியளவில் மும்பையில் உள்ள ப்ராபோர்னே மைதானத்தில் தொடங்கிய போட்டியில் ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமலையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. அதுமட்டுமின்றி, இதுதான் முதல் முறை இந்த இரு அணிகள் விளையாடியது.
போட்டியின் சுருக்கம் ;
முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. ஏனென்றால் டூப்ளஸிஸ் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தார். இருப்பினும் விராட்கோலி மற்றும் ரஜத் படிடர் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 170 ரன்களை அடித்தது பெங்களூர் அணி. அதில் விராட்கோலி 58, ரஜத் 52, மேக்ஸ்வெல் 33, லொம்ரோர் 16 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி.
தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 174 ரன்களை அடித்தது. அதில் சஹா 29, சுமன் கில் 31, சாய் சுதர்சன் 20, டேவிட் மில்லர் 39, ராகுல் திவேதிய 43 ரன்களை அடித்துள்ளனர். அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது குஜராத்.
குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹார்டிக் பாண்டிய ;
போட்டி முடிந்த பிறகு ஹார்டிக் பாண்டிய அளித்த பேட்டியில் ; “சாத்தியமாக நான் இதனை பற்றி கொஞ்சம் கூட யோசித்ததே இல்லை. ஏனென்றால் அணியில் இருக்கும் சில வீரர்கள், அவரவர் பாட்டுக்கு களத்தில் இறங்கி விளையாடி ரன்களை குவித்து வருகின்றனர்.”
“இந்த மாதிரி விளையாடும் அனைத்து வீரர்களையும் நாங்கள் எப்பொழுதும் ஆதரித்து கொண்டே தான் இருப்போம். அவர்களுக்கு நம்பிக்கைக்கு நன்றி சொல்ல வேண்டும். அதிலும் மில்லர் , ராகுல் திவேதிய ஆகியோரின் அதிரடியான ஆட்டம் தான் வெற்றி பெற வைத்ததற்கு முக்கியமான காரணம்.”
“எப்பொழுதும் மற்றொருவர் என்ன சொல்கிறாரோ, அதற்கு யாரும் விளையாட போவதில்லை. நமக்கு என்ன தோன்றுகிறது, அதற்கு தான் பலரும் விளையாடி வருகின்றனர். நான் எப்பொழுது ராகுல் திவேதியவிடம் அதிகம் பேசுவது வழக்கம், அதில் அவர் அவர்மேல் வைத்திருக்கும் நம்பிக்கை வெளிப்படையாக தெரிகிறது.”
“அந்த நம்பிக்கை இருந்தால், 7 வது, 8வதாக பேட்டிங் செய்தலும் போட்டியில் வெற்றியை கைப்பற்றிவிடலாம். எங்களை ஆதரித்து வரும் அனைவருக்கும் மிக்க நன்றி என்று கூறியுள்ளார் ஹார்டிக் பாண்டிய.”
இந்த முறை குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடிய 8 போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த முறை சாம்பியன் படத்தை கைப்பற்றுமா ?? இல்லையா ??