போட்டி 43 :
நேற்று மதியம் 3:30 மணியளவில் மும்பையில் உள்ள ப்ராபோர்னே மைதானத்தில் தொடங்கிய போட்டியில் ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமலையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. அதுமட்டுமின்றி, இதுதான் முதல் முறை இந்த இரு அணிகள் விளையாடியது.
டாஸ் :
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் டூப்ளஸிஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதுவரை நடந்த 42 போட்டிகளில் யார் டாஸ் வென்றாலும் முதலில் பவுலிங் தேர்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதற்கு முக்கியமான காரணம், இந்த முறை ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனேவில் தான் நடைபெற்று வருகிறது.
போட்டியின் விவரம் ;
முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. ஏனென்றால் டூப்ளஸிஸ் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தார். இருப்பினும் விராட்கோலி மற்றும் ரஜத் படிடர் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 170 ரன்களை அடித்தது பெங்களூர் அணி. அதில் விராட்கோலி 58, ரஜத் 52, மேக்ஸ்வெல் 33, லொம்ரோர் 16 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி.
தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 174 ரன்களை அடித்தது. அதில் சஹா 29, சுமன் கில் 31, சாய் சுதர்சன் 20, டேவிட் மில்லர் 39, ராகுல் திவேதிய 43 ரன்களை அடித்துள்ளனர். அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது குஜராத்.
டூப்ளஸிஸ் பேட்டி :
போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த பெங்களூர் கேப்டன் டூப்ளஸிஸ் கூறுகையில் : “எனக்கு தெரிந்து 5 அல்லது 10 ரன்கள் குறைவாக இருந்தது போல தெரிகிறது. ஒருவேலை 175 அல்லது 185 ரன்கள் அடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் எதிர் அணியின் (குஜராத்) பவுலிங் மிகவும் அருமையாக இருந்தது தான் உண்மை.”
“மிடில் ஓவர் அருமையாக பவுலிங் செய்தனர். அதுமட்டுமின்றி, பேட்டிங்கிலும் சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தினார்கள்.எங்கள் அணியில் பட்டிடர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். அது அவருக்கு மட்டுமின்றி அணிக்கு சிறப்பான ஒன்றாக மாறியது.”
“விராட்கோலி விளையாடியது மிகவும் சந்தோசமாக உள்ளது. அவர் சரியான பாதையில் தான் செல்கிறார் என்பதற்கு முக்கியமான உதாரணமாக தான் இதனை நான் பார்க்கிறேன். அவர் அனைத்து போட்டிகளிலும் அரைசதம் அடிப்பது அவருக்கு மட்டுமின்றி, அனைவர்க்கும் சிறந்த ஒன்று தான்.”
“ஒரு அணியில் இருக்கும் முதல் நான்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் சிறப்பாக விளையாடி 70, 80 ரன்களை அடித்தால் மட்டுமே அணியை வெற்றி பெற வைக்க முடியும் என்று கூறியுள்ளார் டூப்ளஸிஸ் .”