இந்திய அணியில் இவரது விக்கெட்டை கைப்பற்றினால் போதும் ; ஆனால் அது கடினம் தான் ; ஜோஸ் பட்லர் ஓபன் டாக் ;

ஆஸ்திரேலியா : இந்த ஆண்டு உலகக்கோப்பை டி-20 லீக் போட்டிகள் கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் சில தினங்களில் இறுதி போட்டி நடைபெற உள்ளதால், யார் கோப்பையை வெல்ல போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

அரை இறுதி போட்டிகள் :

சூப்பர் 12 லீக் போட்டிகளில் விளையாடியதில் குரூப் 1ல் நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணியும், குரூப் 2ல் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணியும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதிலும் இன்று மதியம் 1:30 மணியளவில் தொடங்க உள்ள போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர்.

நாளை நடைபெற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோத உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இங்கிலாந்து அணியை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெறுமா இந்திய ?

இந்திய அணியின் முன்னேற்றம் :

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்திய அணியின் பேட்டிங் வலுவாக மற்றுமின்றி அதிரடியாக இருப்பதுதான் உண்மை. நிதானமாக விளையாடுவதை விட அதிரடியாக விளையாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விராட்கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றனர்.

இதையும் படியுங்க : அரை இறுதி போட்டியில் வென்று ; இறுதி போட்டியில் வெல்ல போகும் அணி இதுதான்; டிவில்லியர்ஸ் உறுதி ;

ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் பெரிய அளவில் பேட்டிங் செய்வது இல்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்து வருவதால் இந்திய அணிக்கு வீக்னஸ் ஆக பார்க்கப்படுகிறது. தொடக்க ஆட்டம் மட்டும் இந்திய அணிக்கு சிறப்பாக அமைந்தால் நிச்சியமாக இந்தியா அணிக்கு தான் வெற்றி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மறைமுகமாக பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் :

இந்திய அணியை வெல்வோம் என்பதை மறைமுகமாக பேசியுள்ளார் ஜோஸ் பட்லர். அதனை பற்றி பேசிய ஜோஸ் பட்லர் கூறுகையில் ; ” இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் மிகவும் அருமையாக இருக்கிறது. அவர் பேட்டிங் செய்வதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். இந்த ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களில் இவரும் ஒருவர் தான்.”

“அவரது பலம் இந்திய அணியில் கிடைக்கும் சுதந்திரம் தான். அவர் நினைத்த படி விளையாடும் அளவிற்கு சுதந்திரத்தை வழங்கி வருகின்றனர்.எப்படி பந்து வீசினாலும் அதற்கு ஏற்ப விளையாடுவதை பழக்கமாக கொண்டுள்ளார் சூர்யா. அதனால் அவரது விக்கெட்டை கைப்பற்றுவதற்கு என்ன செய்ய வேண்டுமென்று யோசிக்க வேண்டும். நிச்சியமாக வாய்ப்பு கிடைக்கும், ஆனால் அதனை சரியாக செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜோஸ் பட்லர்.”

“அதுமட்டுமின்றி, இறுதி போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடக்க வேண்டாம். அதனை தடுக்க நாங்க முயற்சிகளை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார் ஜோஸ் பட்லர்.”