நான் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்கு இது மட்டும் தான் காரணம் ; பொல்லார்ட் ஓபன் டாக் ;

0

ஐபிஎல் போட்டிக்கான ஏலம் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இதுவரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 15 சீசன் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் கேரளாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் நடைபெற உள்ளதால் முக்கியமான வீரர்களை தக்கவைத்து கொண்டு வீரர்களின் பட்டியலை அறிவித்து வருகின்றனர். ஐபிஎல் போட்டிகளில் அதிகமுறை கோப்பையை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி திகழ்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் 2023ல் ரோஹித் சர்மா, பும்ரா, ஆர்ச்சர், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், டேவால்டு ப்ரேவிஸ், திலக் வர்மா,டிம் டேவிட், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், டேனியல் சம்ஸ் போன்ற வீரர்களை தக்கவைத்து கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரரான பொல்லார்ட்-ஐ மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்துக்கொள்ளாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் சற்று முன் வெளியான தகவலின் படி ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் பொல்லார்ட் ஓய்வு பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, ஓய்வை அறிவித்த பொல்லார்ட் இப்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடி வந்துள்ளார். சுமார் 13 ஆண்டுகள் ஒரே அணியில் விளையாடிய நிலையில் ஓய்வை அறிவித்துள்ளார் பொல்லார்ட். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் நடைபெற்று கொண்டு வந்த நேரத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் பொல்லார்ட்.

ஓய்வை பற்றி பேசிய பொல்லார்ட் கூறுகையில் : ” நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடவில்லை என்றால் என்னால் அவர்களுக்கு (மும்பை) எதிராக எந்தவிதமான அணியிலும் விளையாட முடியாது, அதனால் தான் இப்படி செய்தேன் என்று கூறியுள்ளார் பொல்லார்ட்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here