இந்திய அணியின் முக்கியமான வீரர் இவர் தான் ; சூப்பர் ஸ்டார் இவர் தான் ; தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான க்ரேமே ஸ்மித் பேட்டி ;

0

ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஐபிஎல் 2022 போட்டிகள் புதிதாக இரு அணிகள் (லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ்)அணிகள் அறிமுகம் ஆகியுள்ளது. இதுவரை நடந்த 16 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் கொல்கத்தா அணி முதல் இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் இரண்டாவது இடத்திலும், லக்னோ அணி மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்காவது இடத்திலும் உள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் நான்கு இடத்தில இருந்த சென்னை, மும்பை, டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் இந்த முறை புள்ளிபட்டியலில் கீழ் உள்ளது. இருப்பினும் சமீப காலமாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதிலும் டெல்லி அணி கடந்த இரு ஆண்டுகளாக ப்ளே – ஆஃப் -ல் முக்கியமான இடத்தில் உள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி வெறும் ஒரு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதனால் புள்ளிபட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இருப்பினும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனான ரிஷாப் பண்ட் இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை.

இதனை பற்றி பேசியதென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஸ்மித் கூறுகையில் ; ” எனக்கு தெரிந்து இந்திய கிரிக்கெட் அணியில் பல இளம் வீரர்கள் விளையாடி வருகின்றனர். அதுதான் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறியுள்ளார் ஸ்மித்.”

மேலும் ரிஷாப் பண்ட் பற்றி பேசிய ஸ்மித் ” ஐபிஎல் போட்டிகளில் சாம்சன், தினேஷ் கார்த்திக் மற்றும் இஷான் கிஷான் விளையாடும் அளவிற்கு கூடரிஷாப் பண்ட் விளையாடவில்லை என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. பண்ட் சரியாக விளையாடவில்லை என்பதால் அணியில் இருந்து வெளியேற்ற முடியாது.”

அதுமட்டுமின்றி, ரிஷாப் பண்ட் இப்பொழுது அனைத்து விதமான இந்திய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டாராக வளம் வர போகிறார் ரிஷாப் பண்ட். அவர் இப்பொழுது தான் அனைத்து போட்டிகளில் சரியான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.”

“ஒரு போட்டியில் தொடக்கத்தில் இருந்து சரியான பார்ட்னெர்ஷிப் அமைவது கடினம். ஆனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி போட்டியின் தொடக்கத்தில் விக்கெட்டை இழந்துவிட்டால் உறுதியான ஒரு பார்ட்னெர்ஷிப் உருவாக்க டெல்லி கேபிட்டல்ஸ் அணி முயற்சி செய்யவேண்டும்.”

“அதுமட்டுமின்றி, ரிஷாப் பண்ட் இனிவரும் போட்டிகளில் 3வதாக களமிறங்கி போட்டியின் அழுத்தத்தை கையில் எடுத்துக்கொண்டு விளையாட வேண்டும். ஆனால் இதனை செய்ய வேண்டுமென்றால் நிச்சியமாக சில தாமதம் ஆகும் என்று கூறியுள்ளார் ஸ்மித்.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here