சச்சின், தோனி இல்லை ; இவர் தான் எனக்கு சூப்பர்ஸ்டார் ; இவரை பார்த்து தான் கிரிக்கெட்டை கற்றுக்கொண்டேன் ; சுப்மன் கில் ஓபன் டாக் ;

0

நேற்று மதியம் இண்டோரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் லத்தம் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் டார்கெட் செட் செய்ய களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான துவக்க ஆட்டம் அமைந்தது. அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை விளாசினார்கள்.

இருப்பினும் தொடர்ந்து விக்கெட்டை இழந்த கொண்டே வந்த இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்த நிலையில் 385 ரன்களை அடித்துள்ளது இந்திய.

அதில் ரோஹித் சர்மா 101, சுப்மன் கில் 112, விராட்கோலி 36, இஷான் கிஷான் 17, சூர்யகுமார் யாதவ் 14, ஹர்டிக் பாண்டிய 54, வாஷிங்டன் சுந்தர் 9, ஷர்டுல் தாகூர் 25 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

பின்பு 386 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு தோல்வி மட்டும் தான் மிஞ்சியது. ஆமாம், தொடக்க வீரரான டேவன் கான்வே -ஐ தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர்.

அதனால் 41.2 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நியூஸிலாந்து அணி 295 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் அதிகபட்சமாக 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வென்றுள்ளது இந்திய.

போட்டி முடிந்த பிறகு அட்டகாசமாக விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் -யிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுப்மன் கில் கூறுகையில் : “எனக்கு சச்சினை காட்டிலும் விராட்கோலி தான் சூப்பர்ஸ்டார். நான் சச்சின் விளையாடியதை பார்த்து தான் கிரிக்கெட் விளையாட வேண்டுமென்ற ஆசை வந்தது. என்னுடைய தந்தை மிகப்பெரிய சச்சின் ரசிகர். இருப்பினும் நான் விளையாட தொடங்கிய போது சச்சின் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.”

“அதனால் தான் விராட்கோலியை சொல்கிறேன். ஏனென்றால் நான் அவரை பார்த்து தான் பல விஷயங்களை ஒரு பேட்ஸ்மேனாக கற்றுக்கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார் சுப்மன் கில்.”

நடந்து முடிந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் சுப்மன் கில் 208, 40*, 112 ரன்களை அதிகபட்சமாக விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here