இவர் இருக்கும் வரை இந்திய அணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை ; ரோஹித் சர்மா பேட்டி ;

0

முதல் டி-20 போட்டி:

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டி-20 போட்டி நேற்று இரவு சவுத்அம்டன் மைதானத்தில் நடைபெற தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

இந்திய அணியின் பேட்டிங் :

முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமையவில்லை. ஆமாம், ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடினாலும் 24 ரன்களிலும், இஷான் கிஷான் 8 ரன்களை அடித்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர்..! இருப்பினும் இந்திய அணிக்கு வலுவான மிடில் ஆர்டர் உள்ளது.

ஆமாம், தீபக் ஹூடா, ஹர்டிக் பாண்டிய, சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரன்கள் குவிந்தன. இறுதி வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணியால் 198 ரன்களை அடிக்க முடிந்தது. அதில் ரோஹித் 24, இஷான் கிஷான் 8, தீபக் ஹூடா 33, சூரியகுமார் யாதவ் 39, ஹர்டிக் பாண்டிய 51 ரன்களை அதிகமாக அடித்துள்ளனர்.

இங்கிலாந்து பேட்டிங் :

199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது. ஏனென்றால் தொடக்க வீரரான ஜோஸ் பட்லர், லிவிங்ஸ்டன், மற்றும் ஜேசன் ராய் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்த வந்தனர்.

அதனால் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாமல் திணறினார்கள். இருப்பினும் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால், இங்கிலாந்து அணியின் விக்கெட் ஒருவர் பின் ஒருவராக ஆட்டத்தை இழந்து வந்தனர். அதனால் 19.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 148 ரன்களை மட்டுமே அடித்தது இங்கிலாந்து அணி.

அதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளனர்.

ரோஹித் சர்மா பேட்டி:

நாங்க முதல் பந்தில் இருந்தே சிறப்பாக விளையாட தொடங்கினோம். எங்கள் அணியில் (இந்திய) இருக்கும் அனைத்து வீரர்களும் சிறப்பாக தான் விளையாடினோம். அனைவரும் சிறப்பாகி விளையாடி , போட்டியின் ஆபத்தான நிலைக்கு போகவில்லை. ஒரு அணியை எப்படி முன்னேற்றி கொண்டு செல்ல வேண்டும் என்பதை பேட்டிங் செய்யும் வீரர்கள் புரிந்து கொண்டு விளையாட வேண்டும்.”

“அப்படி தான் இன்று அனைவரும் சிறப்பாகி விளையாடினர். ஆனால் இன்று ஹர்டிக் பாண்டிய செய்த பவுலிங் பார்த்து தான் மிகவும் ஆச்சரியத்தில் இருக்கிறேன். இனிவரும் போட்டிகளிலும் அவரது விளையாட்டு இதே போல இருக்க வேண்டும். பவுலிங் மட்டுமின்றி பேட்டிங் செய்தும் ரன்களை விளாசினார்.”

“எப்பொழுதெல்லாம் ஸ்விங் ஆகிறதோ, அப்பொழுது அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி,புதிய பவுலர்கள் இப்படி செய்துதான் எதிர் அணியின் பேட்ஸ்மேன்களை ரன்களை அடிக்கவிடாமல் தடுத்தனர். போட்டியில் அவ்வப்போது சில முக்கியமான கேட்ச்-ஐ தவறவிட்டோம். அதனால் அடுத்த போட்டியில் இன்னும் பலமாக விளையாடுவோம் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

ஹர்டிக் பாண்டிய இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் பேட்டிங் செய்து 51 ரன்களையும், 4 ஓவர் பவுலிங் செய்து 33 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here