இங்கிலாந்து அணியிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க பிரஷித் கிருஷ்ணா மற்றும் குர்னா பாண்டிய ஆகிய இருவரும் அணியில் இணைந்தனர். அவர்கள் முதல் சர்வதேச போட்டியின் மூலம் இந்தியா கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை வென்றது.
முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணியின் வீரர்கள் தவான் , ரோஹித் சர்மா, விராட் கோலி , ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய வீரர்கள் இணைந்து 200க்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்கள்.
இந்தியா அவ்வளோதான் என்று நினைத்த இங்கிலாந்து அணிக்கு தக்க பதிலடியாக கே.எல்.ராகுல் மற்றும் குர்னல் பாண்டிய இணைந்து 120 ரன்களை எடுத்துள்ளனர். அதிலும் குர்னல் பாண்டிய டி-20 போட்டிகளில் விளையாடுவது போல 31 பந்தில் 58 ரன்களை விளாசியுள்ளார். அதில் 2 சிக்சர் மற்றும்க் 7 பௌண்டரிகள் அடங்கும்.
இந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச போட்டிகளில் அதிக நாட்கள் இருக்கும் வாய்ப்பு அதிகம் ….!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அணி வெற்றிக்கு முக்கியமான காரணம் குர்னல் பாண்டிய மற்றும் பௌலர் பிரஷித் கிருஷ்ணா ஆகிய இருவரும் தான் என்றே சொல்லலாம். ஏனென்றால் குர்னல் பாண்டியாவின் அதிரடியான ஆட்டத்தால் மட்டுமே 58 ரன்களை அவரால் எடுக்க முடிந்தது.
Read More : முதல் சில போட்டிகளில் ஐபிஎல் கேப்டன் விளையாடமாட்டார்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்… !
இந்திய அணி 66 ரன்கள் விதியசத்தில் தன வெற்றியை கைப்பற்றியது, ஒருவேளை குர்னல் பாண்டிய அதனை அடிக்காமல் இருந்தால் நிச்சியம் இங்கிலாந்து அணி வெற்றி பெற பல வாய்ப்புகள் இருந்து இருக்கும். அதுமட்டுமின்றி பௌலர் பிரஷித் கிருஷ்ணா சிறப்பான பந்து வீச்சால் 8.1 ஓவர் வீசிய பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டை எடுத்து 54 ரன்களை கொடுத்துள்ளார். அதாவது ஓவருக்கு 6.6 ரன்கள் என்ற கணக்கில் ரன்களை கொடுத்துள்ளார்.
பிரஷித் கிருஷ்ணா 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கமால் இருந்தனர். ஆனால் ஸ்ரீநாத் அரவிந்த் ஓய்வுக்கு பிறகு பிரசித்தி கிருஷ்ணாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது. நான் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று என்னுடைய எண்ணத்தினால் மட்டுமே நான் சென்று கொண்டு இருக்கிறேன்.
ஐபிஎல் போட்டிகளில் இவர் கொல்கத்தா நித ரைடர்ஸ் அணியை சேர்ந்தவர். இவரது முதல் சர்வதேச போட்டியில் ஆடிய அபார ஆட்டத்தால் இந்தியா கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டை எடுத்துள்ளார்.
நான் மீண்டும் சிறப்பான பௌளராக வருவேன். என்னுடைய ஆட்டம் நீண்ட நாள் இருக்கும் என்று பிரஷித் கிருஷ்ணா கூறியுள்ளார். முதல் போட்டியில் போல இனிவரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை பிரஷித் கிருஷ்ணா வெளிப்படுத்தினால் நிச்சியமாக இந்தியா கிரிக்கெட் அணியில் நீண்ட நாட்கள் வாய்ப்பு இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.