அவரது திறமையால் சிஎஸ்கே அணியில் இடம்பிடித்துள்ளார்… நான் அதற்கு காரணம் இல்லை..தோனியின் அதிரடி கருது..!!

0

ஐபிஎல் 2021: வருகின்ற ஐபிஎல் போட்டி ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில். அணைத்து ஐபிஎல் அணி வீரர்களும் அவரவர் அணியில் இணைந்து அரசாங்கத்தின் படி தனிமைப்படுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இன்னும் சில ஐபிஎல் வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றன.

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டி 28ஆம் தேதி நடைபெற உள்ளதனால், முடிந்த பிறகு எல்ல வீரர்களும் அவரவர் ஐபிஎல் அணியில் இணைந்து விடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மார்ச் மத தொடக்கத்தில் இருந்து சென்னையில் பயிற்சி செய்து வந்தனர்.

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அனைவரும் மும்பைக்கு புறப்புட்டு சென்றனர். ஏனென்றால் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் எதிரான போட்டி மும்பையில் உள்ள மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.

Read More : இந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச போட்டிகளில் அதிக நாட்கள் இருக்கும் வாய்ப்பு அதிகம் ….!

அவரது திறமையால்  சிஎஸ்கே அணியில் இடம்பிடித்துள்ளார்… நான் அதற்கு காரணம் இல்லை..தோனியின் அதிரடி கருது..!!

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் மிகவும் மோசமானதாக தான் இருந்தது. ஏனென்றால் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் வெளியேறியதே கிடையாது. ஆனால் கடந்த ஆண்டு அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது.

அது ஒரு பக்கம் இருக்க, இந்த ஆண்டு ஐபிஎல் 2021 ஏலத்தில் புதிதாக ராபின் உத்தப்பா, மெயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம் ஆகிய வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிதாக இடம் பெற்றுள்ளார். சமூகவலைத்தளங்களில் தோனி தான் ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே அணியில் எடுக்க சொன்னதாக தகவல் வெளியானது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராபின் உத்தப்பா; சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எனக்கு கால் செய்து, நீ உன்னுடைய திறமையால் தான் சிஎஸ்கே அணியில் இணைந்து இருக்கீர்கள், அதனால் உங்களை அணியில் சேர்க்கலாமா இல்லை வேண்டாமா என்ற முடிவுக்கு நான் காரணம் இல்லை. அதற்கு முழு காரணம் அணியின் உரிமையாளர்கள் தான் என்று தொலைப்பேசி மூலம் ராபின் உத்தப்பாவுக்கு தோனி கூறியுள்ளார்.

இது மிகவும் எனக்கு ஆர்ச்சரியமாக தான் எனக்கு இருக்கிறது. ஏனென்றால் அவரது நேர்மையான பதில் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி எனக்கு தெரியும் என்னுடைய திறமையால் தான் நான் சிஎஸ்கே அணியில் இணைத்துள்ளேன் என்று. இந்த மாதிரியான கேப்டனுக்கு கீழ் நிச்சியமாக அனைத்து வீரர்களும் ஒருமுறையாவது விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார் ராபின் உத்தப்பா .

“நீ உன்னுடைய தனித்திறமையால் சிஎஸ்கே அணியில் சேர்ந்துள்ளாய்” இதற்கு நான் காரணம் இல்லை என்று தோனி கூறியுள்ளதாக ராபின் உத்தப்பா பதிவு செய்துள்ளார். அவரது பேச்சால் எனக்கு என் மேலான நம்பிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது என்றும் கூறியுள்ளார் ராபின் உத்தப்பா.

ராபின் உத்தப்பா கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து இந்த ஆண்டு ஏலத்தின் முகுளம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here