இந்த இருவரின் கேப்டன்ஷிப்பை வைத்து என்னை ஒப்பிட முடியாது ; அவர்களின் சாதனை மிகப்பெரியது ; கே.எல்.ராகுல் பேட்டி ;

0

இன்று மதியம் 12:30 மணியளவில் ரெஜிஸ் சகபவா தலைமையிலான ஜிம்பாபே அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோத உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்து அனைத்து விதமான தொடர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறது இந்திய.

Kl Ragul

அதனால் இன்றைய போட்டியிலும் நிச்சியமாக இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, ஜிம்பாபே தொடரில் ரோஹித் சர்மா, விராட்கோலி மற்றும் சில முன்னணி வீரர்கள் யாரும் அணியில் இடம்பெறவில்லை. அதனால் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலை நியமனம் செய்துள்ளது பிசிசிஐ.

கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து இந்திய அணியில் விளையாடாமல் இருந்துள்ளார் கே.எல்.ராகுல். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் கே.எல்.ராகுலால் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போனது.

இந்த மாதம் இறுதியில் ஆசிய கோப்பைக்கான போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாட வேண்டுமென்ற காரணத்தால் ஜிம்பாபே அணிக்கு எதிரான தொடரில் தீடிரென்று அணியில் அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. இருப்பினும் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது.

அதில் இந்திய அணி மோசமான நிலையில் தோல்வியை சந்தித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிக்கான தென்னாபிரிக்கா தொடரில் இந்திய அணியை வழிநடத்தினார் கே.எல்.ராகுல். அதில் 0 – 3 என்ற கணக்கில் மோசமான தோல்வியை கைப்பற்றியுள்ளது இந்திய. அதனால் கே.எல்.ராகுலால் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த முடியுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேற்று நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில் பேசிய கே.எல்.ராகுல் கேப்டன் பதவியை பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் “நான் நானாக தான் இருக்க ஆசைப்படுகிறேன். அதேபோல தான் மத்த வீரர்களும் அவரவருக்கு ஏற்ப அணியில் விளையாட வேண்டும்.”

“அதுமட்டுமின்றி ஒரு கேப்டனாக என்னை தோனி மற்றும் ரோஹித் ஷர்மாவிடம் என்னை ஒப்பிட்டு பேச வேண்டாம். ஏனென்றால் அவர்கள் செய்த சாதனை கணக்கில்லாத ஒன்று. இந்திய அணிக்காக அவர்கள் இருவரும் சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தியுள்ளனர். அவர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் அதனை செய்திருக்க முடியுமா என்று தெரியவில்லை.”

“இது நான் கேப்டனாக வழிநடத்த கூடிய இரண்டாவது தொடர் போட்டிகள். அதுமட்டுமின்றி , நான் தோனி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விளையாடி அவர்களிடம் பல விஷயங்களை கற்றுள்ளேன். அதிக போட்டிகளில் அவர்களுடன் விளையாடும் போது நிச்சியமாக பல நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வோம்” என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.

கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாபே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் வெல்லுமா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here