சத்தியமா நம்பவே முடியாத இவர் இப்படியெல்லாம் பேட்டிங் பண்ணுவார் என்று ; கெவின் பீட்டர்சன்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 போட்டிகள் ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இதுவரை 17 போட்டிகள் நடந்த முடிந்துள்ளது.

புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மூன்றாவது இடத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி, நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது.

யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்த ஆண்டு விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறப்பான முறையில் ஆட்டத்தை விளையாடி வருகின்றனர். இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றியை கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளது.

அதனால் விராட் கோலி ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். சமீபத்தில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீட்டர்சன் அளித்த பேட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரரை பற்றி பேசியுள்ளார்.

அதில், நான் சத்தியமா நினைத்து கூட பார்க்கவில்லை கிளென் மேஸ்க்வெல் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அதுவும் புது அணியில் இடம்பெற்று அதிரடியாக விளையாடுவார் என்று. விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அவரது முக்கியமான பங்களிப்பை காட்டியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அவருக்கு சரியான இடம் கிடைத்துள்ளது.எனக்கு தெரியும் மேஸ்க்வெல் அணியில் நல்ல ஒரு இடம் கிடைத்துவிட்டால் நிச்சியமாக அதிரடியாக விளையாடுவர் அதேபோல தான் இப்பொழுது விளையாடி வருகிறார் என்று கூறியுள்ளார் கெவின் பீட்டர்சன்.

இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 176 ரன்களை அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 78 ரன்களை அடித்துள்ளார். அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வருகின்ற 25ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.