எங்கள் அணியில் இவர் இல்லாமல் போய்விட்டார் ; இல்லையென்றால் CSK அணியை வென்றிருக்க முடியும் ; டூப்ளஸிஸ் பேட்டி ;

0

நேற்று மும்பையில் உள்ள பட்டில் மைதானத்தில் நடைபெற்ற 22வது போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு வழக்கம்போல தொடக்கத்தில் சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. ஆமாம், ருதுராஜ் மற்றும் மொயின் அலி போன்ற இருவரும் தொடர்ந்து ஆட்டம் இழந்த நிலையில் சென்னை அணி முதல் 10 ஓவர் முடிவில் குறைவான ரன்களை மட்டுமே முடித்திருந்தது.

ஆனால், போக போக ராபின் உத்தப்பா மற்றும் ஷிவம் துபே போன்ற இருவரும் ரன்களை அடித்து தொம்சம் செய்தனர். அதிரடியாக விளையாடியதால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 216 ரன்களை அடித்துள்ளது சென்னை. அதில் ராபின் உத்தப்பா 88, மொயின் அலி 3, ஷிவம் துபே 95 போன்ற ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர் 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி. என்ன தான் தொடக்கத்தில் சரியாக பார்ட்னெர்ஷிப் அமையாமல் விக்கெட்டை இழந்து வந்தாலும், பின்பு அகமத், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களால் ரன்களை சரமாரியாக அடித்தது பெங்களூர் அணி.

இறுதி வரை போராடிய பெங்களூர் அணி 193 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதில் அனுஜ் ராவத் 12, மேக்ஸ்வெல் 26, அகமத் 41,பிரபுதேசாய் 34, தினேஷ் கார்த்திக் 34 ரன்களை அடித்துள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனான டூப்ளஸிஸ் கூறுகையில் ; “எங்கள் அணிக்கு முதல் 7 ஓவர் பவுலிங் அருமையாக தான் இருந்தது. பின்பு 8 முதல் 14 ஓவரில் சுழல்பந்தை வீச வைத்தேன். அதனை சென்னை வீரர்கள் சரியாக புரிந்து கொண்டு விளையாடினர்.”

“அதுமட்டுமின்றி, ராபின் மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் பார்ட்னெர்ஷிப் தான் வெற்றிக்கு முக்கியமான காரணம். இது போன்ற அதிக ரன்களை அடிக்க வேண்டிய சூழல் ஏற்படும்போது நிச்சியமாக நல்ல ஒரு ஆரம்பம் இருக்க வேண்டும், ஆனால் அது எங்கள் அணிக்கு அமையவில்லை.”

“இந்த முறை அது எங்கள் அணிக்கு இல்லை, அதுமட்டுமின்றி, சென்னை பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்தனர். அதிலும் சரியான நேரங்களில் சுழல் பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது சென்னை. அதுமட்டுமின்றி, எங்கள் அணியில் முக்கிமான பவுலர் ஹர்ஷல் பட்டேல் இல்லை.”

“அவரது முக்கியமான பங்களிப்பு இப்பொழுது இல்லாதது மிகவும் வருத்தமாக தான் உள்ளது. அதுமட்டுமின்றி, அவரது பவுலிங் நிச்சியமாக சென்னை அணியை அதிக ரன்களை அடிக்க விடாமல் தடுத்திருக்க முடியும். அதனை நாங்கள் இன்று தவறவிட்டோம். அப்படியே தோல்வியை பெற்றாலும், அதில் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை என்று கூறியுள்ளார் டூப்ளஸிஸ்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here