இதற்கு ஒரே தீர்வு முன்னாள் வீரரான இவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் ; இல்லையென்றால் இந்தியாவிற்கு சிரமம் தான் ; ஹர்பஜன் சிங் ஓபன் டாக்;

0

ஆஸ்திரேலியாவில் தொடங்கிய டி-20 உலகக்கோப்பை போட்டிகள் ஒருவழியாக நிறைவடைய போகிறது. இறுதி போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோத உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம் :

நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் களமிறங்கியது இந்திய. தொடக்கத்தில் சொதப்பிய இந்திய அணி, இறுதியில் அதிரடியாக விளையாடிய ரன்களை குவித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 168 ரன்களை அடித்தனர்.

பின்பு 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் (ஜோஸ் பட்லர் மற்றும் ஹேல்ஸ்) அதிரடியாக விளையாடிய முதல் ஓவரில் இருந்தே ரன்களை அடித்த காரணத்தால் 16 ஓவர் முடிவிலே 170 ரன்களை அடித்தனர். அதுமட்டுமின்றி, ஒரு விக்கெட்டை கூட இழக்காக நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து.

அதனால் இந்த ஆண்டு ஐசிசி டி-20 லீக் போட்டிகளில் இருந்து விலகியது இந்திய கிரிக்கெட் அணி. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடே சோகத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டை கூட இந்திய அணியால் கைப்பற்ற முடியாதது ஏமாற்றம் தான்.

ஹர்பஜனின் ஆலோசனை :

தோல்வி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியை பற்றி பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ” எனக்கு தெரிந்து இது கேப்டன் மட்டும் பிரச்சனை இல்லை..! சமீபத்தில் இந்திய அணியில் இருந்து வெளியாகிய ஒரு வீரரை மீண்டும் இந்திய அணிக்கு கொண்டு வர வேண்டும். அதுவும் டி-20 போட்டியை சரியாக புரிந்துகொள்ளும் அளவிற்கு இருக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் தெரியும், நான் ஏன் அளவிற்கு ராகுல் டிராவிட் -ஐ மதிக்கிறேன் என்று.

“அவரும் (ராகுல் டிராவிட்) நானும் (ஹர்பஜன்) சேர்ந்து பல போட்டிகளில் விளையாடியுள்ளோம், கிரிக்கெட் போட்டியில் அவரது மூளை சிறப்பாக செயல்படும். ஆனால் டி-20 போட்டிகளுக்கான பயிற்சியாளராக ராகுல் டிராவிட்-ஐ வெளியேற வேண்டாம் என்று நினைத்தால் சமீபத்தில் இந்திய அணியில் இருந்து வெளியான ஒரு வீரரை ராகுல் டிராவிட்-க்கு உதவியாக இருக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதாவது ஆஷிஷ் நெஹ்ரா போல ஒரு வீரர் நிச்சியமாக ராகுல் டிராவிட்-க்கு பெரிய உதவியாக இருக்கும்.”

“ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதுமட்டுமின்றி, ஆஷிஷ் நெஹ்ரா அணியில் இடம்பெற்றால் நிச்சியமாக இளம் வீரர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கும். அல்லது சமீபத்தில் ஓய்வு எடுத்த மற்ற வீரர்களில் ஒருவரை மீண்டும் கொண்டு வர வேண்டும்.” என்று கூறியுள்ளார் நெஹ்ரா. மேலும் கேப்டன் பற்றி பேசிய ஹர்பஜன் சிங் ; “எனக்கு தெரிந்து ஹர்டிக் பாண்டிய தான் டி-20 போட்டிக்கான கேப்டனாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அவரை விட்டால் வேறு யாரும் இந்திய அணியில் சரியான வீரர் இல்லை. இந்திய அணியில் அவர் (ஹர்டிக்) மட்டுமே சிறந்த வீரர், அவரை போல் பல வீரர்கள் இன்னும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டுமென்று கூறியுள்ளார் ஆஷிஷ் நெஹ்ரா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here