கே.எல்.ராகுல் இப்படி செய்வார் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை ; ராகுல் டிராவிட் ஓபன் டாக் ;

அட… அடா… இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான போட்டிகள் பற்றிய பேச்சு இன்னும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி கே.எல்.ராகுலை எப்படி கேப்டனாக நியமனம் செய்தீர்கள் ? என்று ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதற்கு பதிலளித்துள்ளார் ராகுல் டிராவிட்.

இப்பொழுது தான் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்தியுள்ளார் விராட்கோலி. ஆனால் ஒருநாள் போட்டியை ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக கே.எல்.ராகுல் தான் வழிநடத்தினார்.

என் ரோஹித் சர்மா அணியில் இல்லை ?

தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை அறிவித்தது பிசிசிஐ. பின்னர் இந்தியாவில் பயிற்சியை தொடங்கினார்கள் இந்திய வீரர்கள். அப்பொழுது தான் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனான ரோகித் சர்மாவுக்கு கையில் பலமாக அடிப்பட்டுவிட்டது. அதனால் அனைத்து போட்டிகளிலும் இருந்தும் விலகினார் ரோஹித்.

அதனால் விராட்கோலியை ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அவருக்கு (ரோஹித் சர்மா)க்கு பதிலாக கே.எல்.ராகுலை கேப்டனாக நியமனம் செய்தது பிசிசிஐ. ஆனால் ஒரு அதில் ஒரு பயனும் இல்லை. ஆமாம்… ! ஏனென்றால் ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டியில் கேப்டனாக தலைமை தாங்கி வழிநடத்தினார்.

ஆனால் அதில் அனைத்திலும் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் கடுப்பில் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி கே.எல்.ராகுலை எதற்கு கேப்டனாக நியமனம் செய்தீர்கள் என்று பல கேள்விகள் சமுகவலைத்தளங்களில் எழுந்துள்ளன . அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராகுல் டிராவிட் கூறியுள்ளார் ;

எனக்கு தெரிந்து அவர் சிறப்பாக தான் விளையாடினார். ஆனால் அவர் கேப்டன் பதவிக்கு இப்பொழுது தான் ஆரம்பித்துள்ளார். அதுமட்டுமின்றி தோல்வி பெற்ற அணியுடன் இருப்பது அவ்வளவு சுலபம் இல்லை. கேப்டன் பதவி என்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சில பின்னடைவு இருக்கிறது. ஆனால் அதிலும் கே.எல்.ராகுல் சிறப்பாக தான் செயல்பட்டுள்ளார்.