இதற்கு பிறகு இவர்கள் விளையாடுவார்களா என்று தெரியவில்லை ; அது அவங்க கையில் தான் இருக்கிறது ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் 2 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியும், 1 போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வென்றுள்ள நிலையில் இறுதி போட்டி ட்ராவில் முடிந்துள்ளது.

முதல் மூன்று போட்டியை காட்டிலும் நான்காவது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டியின் சுருக்கம் இதோ :

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி சிறப்பாக பேட்டிங் செய்ததால் முதல் இன்னிங்ஸ் முடிவில் 480 ரன்களை அடித்தனர்.

பின்பு சரிசமமாகவே விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 571 ரன்களை அடித்து தொம்சம் செய்தனர். அதுமட்டுமின்றி, போட்டியை எப்படி ட்ரா செய்துவிட வேண்டுமென்று அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்தது இந்திய.

அதனால் 2 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி இருந்ததால் தொடரை வென்றுள்ளனர். போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் : “இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான சொத்தாக தான் ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகின்றனர்.”

“ஆனால் தொடர்ச்சியாக போட்டிகளில் இருப்பார்களா என்று கேட்டால் அது எனக்கு தெரியாது. ஆனால் நான் இருப்பேன் (ரோஹித் சர்மா சிரித்தார்). ஆனால் நான்கு ஆண்டுகள் என்பது சந்தேகம் தான். அவர்கள் அணியில் இருந்து சிறப்பாக விளையாட வேண்டுமென்று தான் நான் ஆசைப்படுகிறேன்.”

“ஏனென்றால் அவர்களுடைய இடத்தில் மற்ற வீரர்கள் சரியாக விளையாடுவார்களா என்று கேட்டால் சந்தேகம் தான். இருப்பினும் அவர்களால் முடிந்த வரை விளையாட வேண்டுமென்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக பவுலிங் செய்த ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ச்சியாக விளையாட வேண்டுமா ? இல்லையா ? உங்கள் கருத்து என்ன ?