நங்க இவருக்கு சரியாக இடம்கொடுத்தோம் ; பார்த்தீங்களா ..! எப்படி பட்டைய கிளப்பிட்டு விளையாடுகிறார் என்று ; தோனி ஓபன் டாக் ;

நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நிதிஷ் ரானா தலைமையிலான கொல்கத்தா அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது. கான்வே, சிவம் துபே, ரஹானே, ஜடேஜா போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடிய ரன்களை குவித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 235 ரன்களை அடித்தது சென்னை.

அதில் ருதுராஜ் கெய்க்வாட் 35, டேவன் கான்வே 56, ரஹானே 71, ஷிவம் துபே 50, ரவீந்தர ஜடேஜா 18 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு காத்திருந்தது அதிர்ச்சி. தொடக்க வீரரான நரேன் மற்றும் ஜெகதீசன் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இருப்பினும் ஜேசன் ராய், ரிங்கு சிங் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இருந்தாலும் இறுதி ஓவர் வரை போராடிய கொல்கத்தா அணி 8 விக்கெட்டை இழந்த நிலையில் வெறும் 186 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் வெங்கடேஷ் ஐயர் 20, நிதிஷ் ரானா 27, ஜேசன் ராய் 61, ரிங்கு சிங் 53* ரன்களை அடித்துள்ளனர்.

அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்றுள்ளது. வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி கூறுகையில் : ” உண்மையிலும் இத்தனை ரசிகர்கள் இங்கு வந்து எங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கு நன்றி. போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பவுலிங் செய்து அசத்தியுள்ளார்.”

“நாங்க விக்கெட்டை எப்படியாவது கைப்பற்றி அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க நினைத்தோம். கொல்கத்தா அணியில் அதிகப்படியான சிறந்த வீரர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். காயம் ஏற்பட்டால் விளையாட முடியாது என்பதை நான் நம்பவே மாட்டேன். எப்பொழுது இளம் வீரர்களிடம் அவர்களை மனதில் பாசிட்டிவ் விஷயங்களை ஊற்றி தாயார் செய்ய வேண்டும்.”

“அதிலும் (ரஹானே) அவர் போக்கில் பேட்டிங் செய்யவிட்டதால் அவரது முழுமையான ஆட்டம் இப்பொழுது தெரிகிறது. நாங்கள் அவருக்கு (ரஹானே) முழுமையான சுதந்திரம் கொடுத்திருக்கோம், அதேபோல அவர் ஆசைப்பட்ட பேட்டிங் ஆர்டரும் என்று கூறியுள்ளார் மகேந்திர சிங் தோனி.”