ரோஹித் ஷர்மாவுக்கு இதை செய்ய நான் துணை கேப்டனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ; ரிஷாப் பண்ட் அதிரடி பேட்டி ;

உலக கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு எப்பொழுது ஒரு தனியிடம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. சமீபத்தில் தான் கேப்டன் பற்றிய சர்ச்சை முடிந்துள்ளது. ஆமாம், சமீபத்தில் தான் விராட்கோலி அனைத்து விதமான போட்டிகளில் இருந்து கேப்டன் பதவியை விட்டு வெளியேறினார்.

அதற்கு பிசிசிஐ தான் காரணம் என்று பலர் அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். விராட்கோலியை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தலைமை வாங்கி வருகிறார். இருப்பினும் இப்பொழுது துணை கேப்டன்க ரிஷாப் இருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனை பற்றி பேசிய ரிஷாப் பண்ட் ; “சில நேரங்களில் அது (துணை கேப்டன் )தேவைப்படலாம். என்னை ஒரு சில போட்டிகளில் துணை கேப்டனாக இந்திய அணியில் அறிமுகப்படுத்தியது பிசிசிஐ. ஒரு வீரராக 200 சதவீதம் விளையாடுவது தான் என்னுடைய கையில் இருக்கும்.”

“அதிலும் நான் துணை கேப்டனாக இல்லாவிட்டாலும் என்னால் 200 சதவீதம் விளையாட முடியும், என்னை சுற்றி இருக்கும் வீரர்களுக்கு உதவியாக இருக்க முடியும். அதுமட்டுமின்றி பவுலர்கள் சோர்வாக இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு ஆறுதலாக இருக்க முடியும்.”

கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு பீல்டிங் சரியாக உள்ளதா இல்லையா ?? என்பதை பார்த்து அவருக்கு உதவியாக இருக்க முடியும். இதனை செய்ய எனக்கு துணை கேப்டன் பதவி ஒன்றும் தேவை இல்லை என்று கூறியுள்ளார் ரிஷாப் பண்ட்.

ரிஷாப் பண்ட் கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆனார். இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1920 ரன்களையும், 24 ஒருநாள் போட்டியில் 715 ரன்களையும், 43 டி-20 போட்டிகளில் 683 ரன்களையும் அடித்துள்ளார் ரிஷாப் பண்ட். அதுமட்டுமின்றி கடந்த இரு ஆண்டுகளாக டெல்லி அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

இப்பொழுது ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் தொடங்கியுள்ளது. இன்று நடந்த இரண்டவாது போட்டியில் களமிறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள். அதில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 179 ரன்களை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது.