அட்டகாசமான ப்ளேயிங் 11 உடன் களமிறங்க போகும் ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் அணி இதுதான் ; இவரு இந்த அணி தானா ..!

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளது. அதிலும் இந்த முறை புதிதாக இரு அணிகளை (லக்னோ மற்றும் குஜராத்) அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் மற்ற அணிகளை விட யார் இந்த அணியில் இடம்பெறுவார்கள் என்று ஆர்வம் அதிக அளவில் எழுந்துள்ளன.

இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ஹார்டிக் பாண்டிய வழிநடத்த உள்ளார். நாளை மாலை 6:30 மணியளவில் தொடங்க உள்ள போட்டியில் ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் மோத உள்ளனர்.

இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இருப்பினும் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியில் யார் யார் இடம்பெற்றுள்ளனர்? ப்ளேயிங் 11 ல் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

அதில் சுமன் கில் ; கடந்த ஆண்டு கொல்கத்தா அணியில் இடம்பெற்று சிறப்பான தொடக்க வீரராக வளம் வந்தார். இதுவரை சுமன் கில் மொத்தம் 58 போட்டிகளில் விளையாடி 1417 ரன்களை அடித்துள்ளார். அதனால் குஜராத் அணிக்கு சிறப்பாக தொடக்க வீரராக இவர் இருப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.

மெத்திவ் வேட் : ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த மெத்திவ் வேட் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டியில் இடம்பெற்றுள்ளார். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஷங்கர் : தமிழக அணியின் கேப்டனாக திகழும் விஜய் ஷங்கர், கடந்த மூன்று ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் விளையாடி வந்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் 7 போட்டிகளில் விளையாடி 58 ரன்களை அடித்துள்ளார். அதேபோல 7 போட்டிகளில் பவுலிங் செய்து 3 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

டேவிட் மில்லர் : தென்னாபிரிக்கா அணியை சேர்ந்த டேவிட் மில்லர் கடந்த இரு ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் 9 போட்டியில் விளையாடி 124 ரன்களை அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 62 ரன்களை அடித்துள்ளார்.

ஹார்டிக் பாண்டிய : இந்திய அணியின் ஆல் – ரவுண்டரான ஹார்டிக் பாண்டிய கடந்த சில ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான வீரர்களாக விளையாடி வந்தார். ஆனால் இந்த முறை மெகா ஏலம் என்ற காரணத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியால் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனது.

ராகுல் திவேதிய: கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் ஆல் – ரவுண்டராக வளம் வருகிறார் ராகுல். கடந்த இரு ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வந்துள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் 14 போட்டிகளில் விளையாடி 155 ரன்களை அடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி 14 போட்டிகளில் பவுலிங் செய்து 8 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். அதனால் இந்த குஜராத் அணியில் முக்கியமான ஆல் – ரவுண்டராக இவர் இருக்க போகிறார் என்பதில் சந்தேகமில்லை.

ரஷீத் கான் , முகமது ஷமி, வருண் ஆரோன் மற்றும் லொக்கி பெர்குசன் போன்ற நான்கு பவுலர் ப்ளேயிங் 11ல் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. அதிலும் ரஷீத் கான் முன்னணி சுழல் பந்து வீச்சாளராகவும், முகமது ஷமி முன்னணி வேகப்பந்து வீச்சாளராகவும் களமிறங்கி விளையாடி வந்தனர்.

இவர்கள் அணியில் இருப்பதால் நிச்சியமாக குஜராத் டைட்டன்ஸ் அணி வலுவான அணியாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நாளை நடைபெற உள்ள போட்டியில் ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றியை கைப்பற்றுமா ?? உங்கள் கருத்து ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here