சீனியர் வீரர்கள் இல்லை ; நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாட போகும் 16 பேர் கொண்ட இந்திய அணியில் லிஸ்ட் இதோ ;

0

ஒருவழியாக நாளை மதியத்துடன் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நிறைவடைய உள்ளது. இறுதி போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோத உள்ளனர்.

Indian Team

எப்பொழுது இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்ற அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடரை வென்று வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக இனிவரும் போட்டிகளில் சீனியர் வீரர்கள் விளையாட கூடாது, ரோஹித் சர்மா, புவனேஸ்வர், ஷமி போன்ற வீரர்கள் ஓய்வு பெற வேண்டுமென்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதற்கு ஏற்ப நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடர் போட்டிகளில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில் 16 பேர் கொண்ட அணியின் விவரத்தை பகிர்ந்துள்ளனர்.

இந்திய அணியின் விவரம் : (டி-20)

ஹர்டிக் பாண்டிய (கேப்டன்), ரிஷாப் பண்ட், இஷான் கிஷான், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால்,குல்தீப் யாதவ், ஹர்ஷல் பட்டேல், முகமத் சிராஜ், புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சசிங் மற்றும் உம்ரன் மாலிக் இடம்பெற்றுள்ளனர்.

(ஒருநாள் போட்டிக்கான அணியின் விவரம்)

ஷிகர் தவான், ரிஷாப் பண்ட், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்டுல் தாகூர், அகமத், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், அர்ஷதீப் சிங், தீபக் சஹார், குல்தீப் சென் மற்றும் உம்ரன் மாலிக் இடம்பெற்றுள்ளனர்.

ரசிகர்கள் பலர் எதிர்பார்த்த படி நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியில் எந்த வீரருக்கு வாய்ப்பு கொடுத்தால் சரியாக இருக்கும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here