அஸ்வின் இடத்திற்கு இவர் தான் சரியாக இருப்பார் ; இவர் அணியில் இருக்க வேண்டும் ; முன்னாள் இந்திய வீரர் உறுதி ; கடுப்பான ரசிகர்கள் ;;

வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி முதல் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அஸ்வின் இருந்தாலும் இல்லையென்றால் எனக்கு கவலை இல்லை. அதற்கு தான் இவர் உள்ளாரே என்று கூறியுள்ளார். மேலும் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ; கடந்த இரு ஆண்டுகளாக குல்தீப் யாதவுக்கு வாய்ப்பே கொடுக்கப்படவில்லை, ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளார்.

அவரை மீண்டும் அணியில் கைப்பற்றியது சாதாரணமான விஷயம் தான். மிடில் ஆர்டரில் விக்கெட்டை கைப்பற்றாது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறாரோ இல்லையோ, அதனை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நான் குல்தீப் யாதவை தான் தேர்வு செய்வேன். ஆனால் வரும் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவருக்கும் ஒரு சிக்கல் உள்ளது.

அதில் ரவி பிஷோனி மற்றும் வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் எனக்கு தெரிந்த படி குல்தீப் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகிய இருவரை வைத்து தான் விளையாட போகிறார்கள்.அதிலும் குறிப்பாக குல்தீப் யாதவ் அனைத்து மூன்று விதமான போட்டிகளிலும் விளையாட வைக்க வேண்டும்.

யுஸ்வேந்திர சஹால் சமீபத்தில் தான் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். அதனால் ஒரு போட்டிக்கு பிறகு அவருக்கு பதிலாக ரவி பிஷோனி வாய்ப்பு கொடுக்கலாம். ஆனால் குல்தீப் யாதவ் அனைத்து மூன்று போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும் அப்பொழுது தான் அவர் எப்படி விளையாட போகிறார் என்பது தெரியவரும் என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

தோனிக்கு பிறகு குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகிய இருவருக்கும் இந்திய அணியில் ஒரே சமயத்தில் வாய்ப்பே கொடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெல்லுமா ? இல்லையா °??