தோனி செய்ததை போல யாராலும் செய்யவே முடியாது ; முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் ஓபன் டாக் ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கடித்தது இந்திய கிரிக்கெட் அணி. இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் எப்படியாவது வென்றுவிடும் என்று பலர் நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி பெற்று வெளியேறியது.

இந்திய கிரிக்கெட் அணி வலுவாக இல்லையா ?

உலக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியால் பல ஆண்டுகள் ஒன்றாக விளையாடும் உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் எதிர்பார்க்கும் அளவிற்கு விளையாடுவது இல்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை கடினமாக வென்றது இந்திய. அதனை அடுத்து பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பவுலிங் மோசமாக இருந்ததால் போட்டி இறுதிவரை சென்றது.

ஆனால் இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிரான போட்டியில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் உண்மையான நிலைமை வெளிப்படுகிறது. அதிலும் இந்திய அணியின் பவுலிங் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என்பது தான் உண்மை. ஏனென்றால், நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியில் பவுலர்களால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை.

தோனியின் சாதனையை யாராலும் முறியடிக்கவே முடியாது :

ஒரு போட்டியில் அனைத்து வீரர்களும் சரியாக விளையாட வேண்டும். அதுமட்டுமின்றி, ஒரு கேப்டனாக அனைத்து விஷயங்களையும் சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா மிகப்பெரிய அளவில் மன அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். அதுமட்டுமின்றி, இதுவரை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தான் அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுள்ளனர்.(டெஸ்ட் போட்டியை தவிர்த்து)

இதனை பற்றி பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் கூறுகையில் ; “எனக்கு தெரிந்து தோனியை போல மூன்று ஐசிசி கோப்பையை வெல்லும் அளவிற்கு கேப்டன் இருக்க வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ளார் கம்பிர்.”

கம்பிர் இப்படி சொன்னது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் வெல்ல தோனி தான் முக்கியமான காரணம் என்று அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்த நேரத்தில், அதற்கு அவர் மட்டும் காரணமில்லை, அனைத்து வீரர்களும் தான் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, அவ்வவ்போது தோனிக்கு எதிராகவும் கருத்துக்களை கூறி வந்துள்ளார் கம்பிர். அவர் இப்படி சொல்வது ஆச்சரியமான விஷயம் தான். கடந்த ஆண்டு ஆவது தோனி இந்திய அணியின் ஆலோசகராக இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here