வீடியோ : கண்கலங்கிய ரோஹித் சர்மா , ஆறுதல் சொன்ன ராகுல் டிராவிட் ; இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய ரோஹித் ஷர்மாவின் வீடியோ ;

0

அரையிறுதி போட்டியின் விவரம் : நேற்று மதியம் 1:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தனர்.

இந்திய அணியின் பேட்டிங் : இந்திய கிரிக்கெட் அணிக்கும் தொடக்க ஆட்டத்திற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆமாம், தொடர்ச்சியாக எந்த போட்டியிலும் பெரிய அளவில் ரன்களை அடிப்பது இல்லை (ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல்). அதனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது. ஆனால் விராட்கோலியின் பங்களிப்பு இந்திய அணிக்கு ரன்கள் சேர்ந்தன. அதுமட்டுமின்றி, 10வது ஓவரில் களமிறங்கிய ஹர்டிக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டத்தால் ரன்களை விளாசினார்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 168 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக விராட்கோலி 50, ஹர்டிக் பாண்டிய 63 ரன்களை அடித்துள்ளனர்.

இந்திய அணியின் மோசமான பந்து வீச்சு :

169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. முதல் ஓவரை அனுபவம் வாய்ந்த புவனேஸ்வர் குமார் தான் பவுலிங் செய்தார். ஆனால் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடிய முதல் ஓவரில் இருந்தே பவுண்டரிகளை விளாச தொடங்கிவிட்டார். பின்பு பார்ட்னெர்ஷிப் செய்து கொண்டது இருந்த ஹேல்ஸ் அதிரடியாக விளையாடிய காரணத்தால் இந்திய அணியின் பவுலர்களால் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் போய்விட்டது. முடிந்தவரை வெவ்வேறு வகையில் பவுலிங் செய்த இந்திய அணியால் இறுதிவரை ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாதது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி 16 ஓவர் முடிவில் 170 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.

இந்திய அணியின் தோல்விக்கு என்ன தான் காரணமாக இருக்கும் ?

இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, கே.எல்.ராகுலின் பார்ட்னெர்ஷிப் மோசமாக அமைந்தாலும், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய போன்ற வீரர்களை அதனை சமாளித்து வந்துள்ளனர். ஒரு சில போட்டிகளில் பவுலிங் வலுவாக இருந்தாலும், பெரும்பாலான போட்டியில் சொதப்பி வருகிறது இந்திய அணியின் பவுலிங். இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் பும்ரா, ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் காயம் காரணமாக அணியில் இடம்பெற முடியவில்லை. ஆனால் எத்தனை ஆண்டுகள் தான் இவர்களை நம்பி இந்திய அணி செயல்படும் ?

நேற்று இந்திய கிரிக்கெட் தோல்வி பெற்ற நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியுள்ளது இந்திய. இதனை பார்த்து கொண்டு இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கண்துடைக்கும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. அதனை பார்த்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட், உடனடியாக ரோஹித் சர்மாவிடம் அமர்ந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் ? என்னவாக இருக்கும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here