இந்திய கிரிக்கெட் அணி: கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பங்களிப்பு அதிகரித்து கொண்டே தான் வருகிறது. அதுமட்டுமின்றி, சமீப காலமாக அனைத்து விதமான தொடரிலும் இந்திய அணி மற்ற அணிகளை வென்று தொடரை கைப்பற்றி வருகின்றனர்.
அதேபோல ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் வெல்ல வேண்டுமென்ற காரணத்தால் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவிற்கு சென்று தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். என்னதான் மற்ற அணிகளுக்கு இடையேயான போட்டியில் தொடரை வென்றாலும், ஆசிய கோப்பை அல்லது உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் மட்டும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது இந்திய.
இந்த முறை ஆவது வெல்லுமா இந்திய என்ற ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.நாளை மதியம் 1:00 மணியளவிற்கு தொடங்க உள்ள போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் விளையாட உள்ளனர்.
மற்ற அணிகளுக்கு இடையேயான போட்டியை விட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு தான் அதிகப்படியான வரவேற்பு இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்திய அணி உலகக்கோப்பை போட்டியில் தோல்வி பெற்றால் கூட பரவாயில்லை, ஒருபோதும் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி பெற கூடாது என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பது தான் வழக்கம்.
சர்வதேச டி-20 போட்டியில் இதுவரை இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மொத்தமாக 11 போட்டிகளில் தான் நேருக்கு நேர் விளையாடி உள்ளனர். அதில் இந்திய அணி அதிகபட்சமாக 8 போட்டிகளிலும் , பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் வென்றுள்ளனர். நாளைய போட்டியில் இந்திய அணி வெல்லுமா ?
இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி இதுதானா ?
அனேகமாக, இந்த ஆண்டு நடைபெற்று கொண்டு இருக்கும் ஐசிசி உலகக்கோப்பை 2022 போட்டி தான் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதி போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
இதற்கு பதிலளித்த பிசிசிஐ உறுப்பினர் ஜெய் ஷா கூறுகையில் ; “நிச்சியமாக இந்திய வீரர்கள் யாரும் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார்கள். அதனால் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி போதுமான இடத்தில் தான் நடைபெறும் என்று கூறியுள்ளார்.”
இதனை கண்டிக்கும் விதமாக ஒருவேளை இந்திய அணி பாகிஸ்தானுக்கு ஆசிய கோப்பை விளையாட வரவில்லை என்றால், நிச்சியமாக நாங்கள் ஆசிய கோப்பையில் விளையாட இந்தியாவிற்கு வரமாட்டோம். அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணி விலகிவிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை பற்றி கேள்விகள் ரோஹித் சர்மாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா கூறுகையில் ; “இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு போகுமா இல்லையா என்று இப்பொழுது பேச வேண்டிய தேவை இப்பொழுது இல்லை. அதனை பிசிசிஐ நிச்சியமாக சரியான முடிவை கையில் எடுப்பார்கள். என்னுடைய முழு கவனமும் இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”