என்னை நம்பி அணியில் விளையாட வாய்ப்பு கொடுத்தது மட்டுமின்றி எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பது இவர் மட்டும் தான் ; தினேஷ் கார்த்திக் ஓபன் டாக் ;

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்த உலகக்கோப்பை போட்டிகள் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபேற தொடங்கியுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால் விறுவிறுப்பான தொடருக்கு பஞ்சம் இருக்காது.

அதுமட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அணி இந்த முறை உலகக்கோப்பை 2022 போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டுமென்ற காரணத்தால் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். என்னதான் தொடருக்கு சீரியஸ் போட்டிகளில் வென்று கோப்பையை வென்றாலும், ஆசிய , உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் தோல்வியை மட்டுமே பெற்று வருகிறது இந்திய.

இந்நிலையில் எப்படி இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை போட்டியில் வெற்றிபெறும் ? அதுமட்டுமின்றி இந்த முறை ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் பும்ரா, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் அணியில் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இந்திய அணியின் நம்பியான பினிஷர் :

கடந்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் பெங்களூர் அணியில் விளையாடி தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதனால் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் இடம்பெற்று சிறப்பாக விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக்.

அதுமட்டுமின்றி, அவரது அதிரடியான ஆட்டத்தால் ஆசிய கோப்பை மற்றும் இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியிலும் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். தினேஷ் கார்த்திக்கின் வருகை ரிஷாப் பண்ட் -க்கு ஆபத்தாக மாறியுள்ளது. ஏனென்றால், தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருவதால் ரிஷாப் பண்ட் -க்கு வாய்ப்புகள் அவ்வப்போது மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி, இந்த உலகக்கோப்பை போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா தினேஷ் ? அதுமட்டுமின்றி, பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்ற தினேஷ், தனது வெற்றிக்கு முக்கியமான காரணம் ? யார் யார் ஆதரவாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.

அதில் “எல்லாவற்றையும் கடந்து, என்னை நம்பி, எப்போதும் எனக்காக நேரம் ஒதுக்கி, சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சத்தைக் காட்டிய ஒரு மனிதருக்கு, நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அது என்னை பொறுத்தவரை ரோஹித் சர்மாவிற்கு (இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்) தான் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.”

இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுமா ? இல்லையா ? அதுமட்டுமின்றி தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பு எந்த அளவிற்கு முக்கியமான ஒன்றாக இருக்கும் ?