தெளிவாக தெரிகிறது இவர்கள் இருவரும் இதற்கு மேல் அணியில் இருப்பது பிரியோஜனம் இல்லை ; சரியாக விளையாடுவதே இல்லை ; முன்னாள் தேர்வாளர் உறுதி ;

இந்திய அணியின் கேப்டன் பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எதுவும் நடப்பது இல்லை…!!

சமீபத்தில் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் விளையாடிய விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதனால் தொடரையும் கைப்பற்ற முடியமால் போய்விட்டது. அதன்பிறகு டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார்.

இப்பொழுது ஒரே கேள்வி யார் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் ? என்பது தான். அதுமட்டுமின்றி தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஹானே மற்றும் புஜரா ஆகிய இருவரும் சரியாக விளையாடவில்லை. அதனால் இந்திய அணியிம் மிடில் ஆர்டர் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரீம் அளித்த பேட்டியில் ; எப்பொழுதும் வருடம் வருடம் பிசிசிஐ வீரர்களுக்கான சம்பளம் எவ்வளவு என்ற பட்டியலை வெளியிடும். அதில் கடந்த ஆண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படும்.

ஆனால் அதில் ரஹானே மற்றும் புஜரா ஆகிய இருவரின் ஆட்டமும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆமாம்… ! அவர்கள் மீதான எதிர்பார்த்து குறைந்து கொண்டே போகிறது. அதனால் அவர்களுக்கு கிரேட் c சம்பளத்தை கொடுத்து அணியில் வைத்திருந்தால் வாய்ப்பு வழங்கப்படுமா ?? இதனை அணியின் தேர்வாளர்கள் சற்று யோசித்து முடிவு செய்ய வேண்டும் ; என்று கூறியுள்ளார் சபா கரீம்.

தொடர்ந்து பேசிய சபா கரீம் , இந்திய அணியில் இவருக்கு அதிகமான சம்பளம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதில் எனக்கு தெரிந்து கடந்த ஆண்டில் அருமையாக விளையாடிய ஒரே வீரர் ரவீந்திர ஜடேஜா தான். அவர் மட்டும் தான் எப்பொழுதும் அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

அதேபோல ரிஷாப் பண்ட் மற்றும் கே.எல் ராகுல் போன்ற வீரர்களுக்கு அதிக சம்பளம் வழங்க அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, பவுலர் முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் மற்றும் தீபக் சஹார் போன்ற வீரர்களுக்கு சம்பள உயர்வு கொடுக்கலாம் என்று கூறியுள்ளார் சபா கரீம்.