கோரிக்கை வைத்த ஜடேஜா…! அதனை நிறைவேற்றுமா சிஎஸ்கே அணி !! என்னடா இவர் இப்படி பேசுறாரு ??

0

ஐபிஎல் டி20 2022 போட்டிக்கான ஏலம் வருகின்ற பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதியில் நடைபெற உள்ளது. இந்த முறை மெகா ஏலம் நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் டி20 லீக் போட்டியில் லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் புதிய அணிகளை தவிர்த்து மிதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்று பிசிசிஐ கூறியது.

அதன்படி சமீபத்தில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. அதில் பல வீரர் எதிர்பார்த்த விதத்திலும் பலர் எதிர்பாராத வகையிலும் இருந்தது தான் உண்மை. ஐபிஎல் டி20 போட்டிகளில் அதிக எதிர்பார்ப்பை துண்டியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை 14 சீசன் ஐபிஎல் லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டிக்கான தக்கவைப்பு பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 16 கோடி, மகேந்திர சிங் தோனி 12, மொயின் அலி 8, ருதுராஜ் கெய்க்வாட் 6 போன்ற வீரர்களை தக்கவைத்துள்ளனர். சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளனர். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட், 3வது இடத்தில் மொயின் அலி, 7வது இடத்தில் தோனி மற்றும் 8வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா மிதமுள்ள 2,4,5,6,9,10 மற்றும் 11 வது இடத்தில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த ஜடேஜா, நான் 8வது இடத்தில் அவ்வளவு விரைவாக விளையாட மாட்டேன், நான் 11 வது இடத்தில் தான் விளையாடுவேன் என்று கூறியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. இதன் பதிவு இப்பொழுது வைரலாக பரவி வருகிறது. ரவீந்திர ஜடேஜா 2012 முதல் 2015வரை மற்றும் 2018 முதல் இப்பொழுது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார் ஜடேஜா.

அதுமட்டுமின்றி அடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும் இவர் தான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள Comments பக்கத்தில் பதிவு செய்யுங்கள்….!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here