இரு தமிழக வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுப்பட்டுள்ளது ; ஆனால் ப்ளேயிங் 11ல் இடம்கிடைக்காது ; காரணம் இதுதான் ;

0

வருகின்ற 6ஆம் தேதி பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மூன்று ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட உள்ளனர்.

சமீபத்தில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாட உள்ள 18 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான அணிகளில் ஒரு சிலர் மட்டும் தான் இரண்டு விதமான போட்டிகளிலும் விளையாட உள்ளனர்.

இதில் இளம் வீரரான ரவி பிஷோனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தமிழக வீரரான ஷாருக்கான் மற்றும் சாய் கிஷோர் ஆகிய இருவருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ப்ளேயிங் 11ல் இல்லை.

ஏனென்றால் சமீபத்தில் அறிவித்த 18 பேர் கொண்ட அணியில் ஷாருகான் மற்றும் சாய் கிஷோர் ஆகிய இருவரையும்காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் வைத்துள்ளது பிசிசிஐ. ஏதாவது வீரருக்கு காயம் ஏற்பட்டு அணியில் இருந்து வெளியேறினால், ஷாருகான் அல்லது சாய் கிஷோருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இவர்கள் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளதால் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது ரஞ்சி கோப்பை போட்டிக்கான தமிழக அணியில் இவர்கள் இருவரும் விளையாட வாய்ப்பு இருக்காது. அதனால் உடனடியாக மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமென்று பிசிசிஐ கூறியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 சையத் முஸ்தாக் அலி கோப்பை போட்டியில் ஷாருகான் ஆடிய அபார ஆட்டத்தால் வெற்றியை கைப்பற்றியது தமிழக அணி. ஆமாம்..! இறுதி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார் ஷாருக்கான். அவருக்கு நிச்சியமாக இந்திய அணியில் விளையாட வாய்ப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வந்துள்ளார் ஷாருக்கான். ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்படவில்லை. அதனால் ஐபிஎல் டி-20 2022 போட்டிக்கான ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here