இப்படி நடந்தது பிடிக்கவில்லை ; எனக்கு இப்படி இருந்தால் தான் பிடிக்கும் ; சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக் ;

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் டி-20 போட்டிக்கான தொடரை வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

மூன்றாவது போட்டியின் சுருக்கம் :

நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கிய மூன்றாவது டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய வழக்கம்போல் பவுலிங்கை தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணிக்கு பார்ட்னெர்ஷிப் சிறப்பாக அமைந்தது. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 227 ரன்களை அடித்தது தென்னாபிரிக்கா அணி.

அதில் டி-காக் 58, தெம்பா பவுமா 3, ரோஸோவ் 100*, ஸ்டப்ஸ் 23, டேவிட் மில்லர் 19* ரன்களை அடித்துள்ளனர். பின்பு 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. ஆனால் தோல்வி தான் காத்திருந்தது. ஏனென்றால் தொடக்கத்தில் இருந்து சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்தது இந்திய.

குறிப்பாக சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்தது பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. 18.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த இந்திய கிரிக்கெட் அணி 178 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதில் ரோஹித் சர்மா 0, ரிஷாப் பண்ட் 27, ஸ்ரேயாஸ் ஐயர் 1, தினேஷ் காத்திக் 46 சூர்யகுமார் யாதவ் 8, அக்சர் பட்டேல் 9, ஹர்ஷல் பட்டேல் 17, ரவிச்சந்திரன் அஸ்வின் 2, தீபக் சஹார் 31 , உமேஷ் யாதவ் 20 ரன்களை அடித்துள்ளார். அதனால் 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி டி-20 தொடரில் ஆறுதல் வெற்றியை கைப்பற்றியுள்ளது தென்னாபிரிக்கா அணி.

இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் வருத்தம்:

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். ஆனால் மூன்றாவது போட்டியில் சூர்யகுமார் யாதவிற்கு சில விஷயங்கள் பிடிக்கவில்லை.

இந்திய அணியில் நடந்த முக்கியமான நிகழ்வை பற்றி பேசிய சூர்யகுமார் யாதவ் : ” நான் எப்பொழுதும் எவ்வளவு ரன்களை அடித்தாலும் Stats நான் பார்க்கவேமாட்டேன். ஆனால் என்னுடைய நம்பர்கள் வாட்சப்-ல் அனைத்து Stats வரையும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அதனை நான் பார்த்து கொள்ளவே மாட்டேன்.”

“என்னுடைய நோக்கம் ஒன்று தான், தொடர்ந்து ரன்களை அடிக்க வேண்டும் என்று தான். நானும் முடிந்தவரை தினேஷ் கார்த்திக்குடன் பார்ட்னெர்ஷிப் செய்ய நினைத்தேன். ஆனால் சில விஷயங்கள் எனக்கு இன்று அமையவில்லை. இன்னும் தினேஷ் கார்த்திக்கு சில போட்டிகள் தேவைப்படுகிறது.”

“அதுமட்டுமின்றி என்னுடைய நான்காவது இடத்திற்கு ஆபத்து காத்திருக்கிறது. எனக்கு நான்காவதாக பேட்டிங் செய்தால் தான் போட்டியின் நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப என்னால் விளையாட முடியும். இந்த விஷயத்தை பற்றி நான் அதிகமாக பேசவிரும்பவில்லை என்று கூறியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.”

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 5வது இடத்தில் பேட்டிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவின் பங்களிப்பு எந்த அளவிற்கு முக்கியமான ஒன்று ?