தினேஷ் கார்த்திக் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ததற்கு இதுதான் முக்கியமான காரணம் ; ராகுல் டிராவிட் பேட்டி ;

ஒருவழியாக இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. அதில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் தொடரை கைப்பற்றியுள்ளது. இதனை அடுத்து நாளை மதியம் முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளது.

உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகும் இந்திய :

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் வருகின்ற 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் இன்று 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல போகின்றனர்.

இந்திய வீரர்களின் பட்டியல் :

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல் மற்றும் அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, காத்திருப்பு பட்டியலில் ; தீபக் சஹார் , முகமத் ஷமி, ரவி பிஷானி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியில் இருக்கும் முக்கியமான வீக்னஸ் :

இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக மற்ற அணிகளுக்கு இடையேயான தொடரில் சிறப்பாக விளையாடி தொடரை வென்று வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாபிரிக்கா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற முக்கியமான அணிகளுக்கு எதிரான தொடரிலும் வென்றுள்ளது இந்திய.

ஆனால் ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற முக்கியமான சாம்பியன் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து கொண்டே வருகிறது இந்திய. அதனால் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணி வெல்லுமா இல்லையா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டி :

கேள்வி : இந்திய அணியின் அதிரடியான பேட்டிங்க்கு என்ன காரணம் ?

பதில் : கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கு 2021 க்கு பிறகு வீரர்கள் அனைவரும் ஆலோசனை மேற்கொண்டு இருந்த நேரத்தில் தான் முடிவு செய்தோம், இனிவரும் போட்டிகளில் அதிரடியாகவும் பாசிட்டிவ்-ஆகவம் விளையாட வேண்டுமென்று. அதுமட்டுமின்றி, இப்பொழுது இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் அதிரடியாக விளையாட கூடியவர்கள் தான்.

கேள்வி : பும்ரா உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறிவிட்டார் ?

பதில் : இது போன்ற விஷயங்கள் நடப்பது சாதாரணம் தான். ஆனால் அவருடைய இடத்தில் மற்றொரு வீரர் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் தொடர்ந்து விளையாட வாய்ப்புகள் இருக்கும். நிச்சியமாக அவர் (பும்ரா) இல்லாதது வருத்தமாக தான் இருக்கிறது.

கேள்வி : ரிஷாப் பண்ட் ஆ? தினேஷ் கார்த்திக் ஆ ?

பதில்: மூன்றாவது போட்டியில் இவர்கள் இருவருக்கும் அதிகப்படியான வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. ஏனென்றால் மிடில் ஓவரில் அதிக நேரம் பேட்டிங் செய்ய இவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். 6வதாக பேட்டிங் செய்தால் இறுதி நேரத்தில் அதிகபட்சமாக 5 முதல் 10 பந்துகள் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்து வந்தது. அதனால் தான் அவர்களை டாப் ஆர்டரில் களமிறக்க வைத்தேன்.

இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வெல்லுமா ? அதற்கான வாய்ப்புகள் இந்திய அணிக்கு இருக்கிறதா ? ஏனென்றால் பேட்டிங் வலுவாக இருந்தாலும் பவுலிங் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது தான் உண்மை..! என்ன செய்ய போகிறது இந்திய ?