இவங்களுக்கு தான் மேன் ஆஃப் த மேட்ச் மற்றும் மேன் ஆஃப் த சீரியஸ் விருது கொடுத்திருக்க வேண்டும் ; விராட் கோலி வருத்தம் ….!

IND VS ENG 2021: நேற்று நடந்த இறுதி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணியின் வீரர் ரோஹித் சர்மா மற்றும் தவான் சிறப்பான தொடக்க ஆட்டத்தை விளையாடினார்.

இருந்தாலும் ரோஹித் சர்மா 37 ரன்கள் மற்றும் தவான் 67 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் பேட்டிங் செய்த இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் வெறும் 7 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி அவ்வளவுதான் என்று நினைத்து கொண்டு இருந்த போது. ரிஷாப் பண்ட் மற்றும் ஹார்டிக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 329 ரன்களை எடுத்தனர்.

அதன்பின்பு 330 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. ஏனென்றால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த பரிஸ்டோவ் வெறும் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அதன்பின்னர் பேட்டிங் செய்த வீரர்கள் , பென் ஸ்டோக்ஸ் 35 ரன்கள், மலன் 50 ரன்கள், ஜோஸ் பட்லர் 15 ரன்கள், மற்றும் மெயின் அலி 29 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இங்கிலாந்து அணி 200 ரன்களில் ஆட்டம் இழக்கும் என்று நினைத்த இந்திய அணிக்கு செக் வைக்கும் விதமாக சாம் கரண் ஆட்டம் இருந்தது.

Also Read : வீடியோ; ரொம்ப நன்றி நல்ல வேல காப்பாத்திட … ஹார்டிக் பாண்டிய செய்த குறும்பு …வைரலாகும் வீடியோ….!

50 ஓவர் முடியும் வரை போராடிய சாம் கரண் ஆட்டம் இழக்காமல் 95 ரன்களை எடுத்துள்ளார். இறுதி ஓவர் வரை போராடிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் தோல்வியை சந்தித்தனர். இந்திய அணி 7 ரன்கள் விதியசத்தில் இங்கிலாந்து அணியை வென்று தொடரை கைப்பற்றியது.

இவங்களுக்கு தான் மேன் ஆஃப் த மேட்ச் மற்றும் மேன் ஆஃப் த சீரியஸ் விருது கொடுத்திருக்க வேண்டும் ; விராட் கோலி ஆதங்கம் ….!

போட்டி முடிந்த பின்பு, இறுதி போட்டியில் அதிக ரன்களை எடுத்ததால் சாம் காரனுக்கு மேன் ஆஃப் த மேட்ச் மற்றும் ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்து பரிஸ்டோவுக்கு மேன் ஆஃப் த சீரியஸ் விருதையும் கொடுத்துள்ளனர். அதன்பின்னர் விராட் கோலி அளித்த பேட்டியில் எனக்கும் மிகவும் ஆர்ச்சரியமாக இருக்கிறது.

இறுதி போட்டியில் தாகூர் 4 விக்கெட் எடுத்துள்ளார், அவருக்கு தான் மேன் ஆஃப் த மேட்ச் கொடுத்திருக்க வேண்டும் என்று நான் நினைக்குறேன். அதுமட்டுமின்றி மூன்று ஒருநாள் போட்டியிலும் தொடர்ச்சியாக விக்கெட் எடுத்துள்ளார் புவனேஸ்வர் குமார், அவருக்கு தான் மேன் ஆஃப் த சீரியஸ் விருது தந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர் மூன்று போட்டிகளில் சேர்த்தி 6 விக்கெட் விக்கெட் எடுத்துள்ளார் அதுமட்டுமின்றி மிகவும் காமியாக ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார். ஆனால் என் எதிரணிக்கு விருதுகள் சென்றது என்று புரியவில்லை ; கூறியுள்ளார் விராட் கோலி.