நான் என்ன சாம் கரனிடம் சொன்னானோ..! அதேதான் நான் செய்துள்ளேன் ; ஷர்டுல் தாகூர் ; முழு விவரம் இதோ ;

சமீபத்தில் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் நான்கு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

பின்பு இப்பொழுது ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளதால், அனைத்து வீரர்களும் ஐக்கிய அரபு நாட்டில் பயிற்சி செய்து வருகின்றனர். இங்கிலாந்து அணி ஆல் -ரவுண்டர் சாம் கரன் மற்றும் இந்திய அணியின் பவுலர் ஆன ஷர்டுல் தாகூர் ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் ஷர்டுல் தாகூர் ஒரு முக்கியமான விஷயத்தை கூறியுள்ளார். அதில் ” எனக்கும் சாம் கரனுக்கு இடையே நல்ல ஒரு நட்பு உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிகள் நடக்கும்போது நாங்கள் இருவரும் பேசிக்கொண்டாம்.

அதில் சாம் கரன் ” நிச்சியமாக 100 ரன்களை எடுக்கும் வரை எந்த விக்கெட்டையும் இங்கிலாந்து அணி இழக்காது என்று”. ஆனால் நான் சொன்னேன், இல்லை இல்லை நிச்சியமாக நான் விக்கெட்டை எடுத்து பார்ட்னெர்ஷிப்பை முறியடிப்பேன் அதுமட்டுமின்றி, நாங்கள் தான் போட்டியை ஜெயிப்போம் என்று சொன்னேன். அதேபோல நங்கள் தான் போட்டியில் கைப்பற்றியுள்ளோம் என்று கூறியுள்ளார் ஷர்டுல் தாகூர்.

தாகூர் சொன்ன மாதிரி தான் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ் போட்டிகளிலும் அரைசதம் அடித்துள்ளார் தாகூர். அவரது ரன்கள் இந்திய அணிக்கு வெற்றியை கைப்பற்ற மிகவும் உதவியாக இருந்துள்ளது என்பது தான் உண்மை.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அவரை லார்ட் ஷர்டுல் என்று கூப்பிட்டு வந்தனர். இதனை பற்றி அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷர்டுல் ; எனக்கு அந்த பேர் முக்கியம் இல்லை, நான் எந்த அளவுக்கு ஒரு போட்டியில் முக்கியமான நமபராக இருக்கிறான் என்பது தான் முக்கியம் என்று கூறியுள்ளார் தாகூர்.

சாம் கரன் மற்றும் ஷர்டுல் தாகூர் ஆகிய இருவரும் இருக்கின்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ஐக்கிய அரபு நாட்டில் கோப்பையை வெல்லுமா ?? இல்லையா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்..>!