தோனி எப்பொழுதும் இப்படி தான் ; மற்றவர்கள் நினைப்பது போல இல்லை ; ஆர்.சி.பி. கேப்டன் டூப்ளஸிஸ் ஓபன் டாக்

0

ஐபிஎல் 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும் இந்த முறை மெகா ஏலம், புதிய இரு அணிகள் அறிமுகம் போன்ற விஷயங்கள் நடந்து முடிந்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை சாம்பியன் கைப்பற்றிய அணிகளுள் ஒன்று தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து இப்பொழுது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது.

இருப்பினும் இந்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற்ற காரணத்தால் ருதுராஜ் ,மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனியை மட்டுமே தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதனால் டூப்ளஸிஸ் -ஐ- கைப்பற்ற முடியாமல் போனது. டூப்ளஸிஸ் சென்னை அணியின் முக்கியமான வீரர் என்பதில் சந்தேகமில்லை.

ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் ருதுராஜ் மற்றும் டூப்ளஸிஸ் ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை அடித்து பல போட்டிகளில் வெற்றி பெற முக்கியமான காரணமாக இருந்துள்ளனர். அப்படி இருந்தும் டூப்ளஸிஸ் ஐ வெளியேற்றியது.

இப்பொழுது டூப்ளஸிஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் மூன்று போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 6வது இடத்தில் உள்ளனர். சமீபத்தில் பெங்களூர் கேப்டன் டூப்ளஸிஸ் அளித்த பேட்டியில் ; சென்னை அணியை பற்றி சில முக்கியமான கருத்தை பேசியுள்ளார்.

அதில் “நான் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது மிகவும் சந்தோசமாக உள்ளது. நான் இதுவரை செய்த அனைத்து விஷயத்திற்கும் அனைவரும் உங்களுது ஆதரவை கொடுத்து வருகிறீர்கள். அது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது…….!

“நான் மறுபடியும் சென்னையில் இருக்கும் வீரர்களுடன் விளையாடியது எனக்கு மிகவும் சந்தோசமாக தான் இருந்தது. அதுமட்டுமின்றி, நான் சென்னை அணிக்கு மிகவும் கடமை பட்டுள்ளேன். ஏனென்றால் 10 ஆண்டுகளாக நான் சென்னை அணியில் விளையாடியுள்ளேன். அதனால் எப்பொழுது என்னுடைய மனதில் சென்னை அணிக்கு தனி இடம் உள்ளது.”

“நான் தோனியிடம் பல விஷயங்களை கற்றுள்ளேன். தோனி மற்றவர்களை போல இல்லாமல் மிகச்சிறந்த கேப்டனாக திகழ்கிறார். இப்பொழுது நான் இரு (தோனி, விராட்கோலி) முக்கியமான வீரர்களுக்கு இடையே பல விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் டூப்ளஸிஸ்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here