மும்பை அணிக்கும் பும்ராவுக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை இதுதான் ; இதை சரி செய்தால் மும்பை அணிக்கு வெற்றி தான் ;

0

ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 23 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்று இரவு நடைபெற உள்ள 24வது போட்டியில் ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 10 அணிகளை கொண்டு விளையாடி வருகின்றனர். அதனால விறுவிறுப்பான போட்டிக்கு ஒருபோதும் பஞ்சம் இருக்காது. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இதுவரை மொத்தம் 14 சீசன் நடந்து முடிந்துள்ளது, அதில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறையும், சென்னை அணி நான்கு முறையும் கோப்பையை வென்றுள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியிலும், மும்பை விளையாடிய அனைத்து ஐந்து போட்டிகளிலும் தோல்வியை பெற்றுள்ளது.

இது இரு அணிகள் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை பெற்றது. மும்பை அணியின் தோல்வியை பற்றி பலர் அவரவரே கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் ; “மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான பலமே முக்கியமான பவுலர் பும்ரா உள்ளது தான். பும்ரா அதிகபட்சமாக நான்கு ஓவர் தான் பவுலிங் செய்ய முடியும், இது எதிர் அணியில் விளையாடும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.”

“ஆனால் பும்ராவை தவிர்த்து மீதம் 16 ஓவர் உள்ளனர்.அதில் சுலபமாக ரன்களை அடித்துவிடுகின்றனர்.ஏனென்றால் பும்ரா போன்ற அழுத்தமுள்ள பவுலிங் மற்ற வீரர்கள் யாரும் செய்வது இல்லை. அதனால் பும்ரா ஓவரில் கடிபட்டு விளையாடுவதை விட மற்ற ஓவரில் விளையாடி ரன்களை அடித்து வருகின்றனர்.”

“அதனால் பும்ராவை தவிர்த்து சிறப்பாக வீச கூடிய பவுலரை விரைவாக தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதில் எனக்கு தெரிந்து டிமால் மில்ஸ் அல்லது மெரிடித் நிச்சியமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட கூடிய முக்கியமான பவுலர் தான் என்பதில் சந்தேகமில்லை.”

“இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் நிச்சியமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்றத்தை ஏற்படுத்தித்தான் விளையாட வேண்டும். அணியை மாற்றாமல் விளையாடி வெற்றி பெறுவது சுலபம் இல்லை என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here