CSK அணியில் தோனிக்கு பிறகு நடந்த மிகப்பெரிய மாற்றம் இதுதான் ; பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி பேட்டி ;

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். பின்பு ரசிகர்கள் வரவேற்பை பெற்ற நிலையில் இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 14 சீசன் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது 15சீசன் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ரவீந்திர ஜடேஜா தலைமை பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஆனால் தோல்வியை மட்டுமே கைப்பற்றி வருகிறது. இந்த முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்று கேட்டால் சந்தேகம் தான்.

ஏனென்றால் இதுவரை சென்னை அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு போட்டியில் தோல்வியை பெற்று புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை அணியின் தோல்விக்கு கேப்டன் ரவீந்திர ஜடேஜா அணியை சரியாக வழிநடத்தாதது தான் காரணமாக இருக்குமோ ?

சென்னை அணி தோல்வி பெற்றால் ரவீந்திர ஜடேஜா தான் காரணம் என்று பலர் அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையில், சென்னை அணியின் பயிற்சியாளரான மைக் ஹஸ்ஸி அளித்த பேட்டியில் , சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் ” நிச்சியமாக ரவீந்திர ஜடேஜா மிகப்பெரிய மாற்றம் தான். தோனி நீண்ட ஆண்டுகளாக சென்னை அணியை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார், அதுவும் சிறப்பாக. அதனால் தோனியின் யோசனை நிச்சியமாக ரவீந்திர ஜடேஜா முதல் முறையாக கேப்டனான பிறகு உதவியாக இருக்கும்.”

“எஎப்பொழுதும் ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி ஆகிய இருவரும் கேப்டன் பதவியை பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். அதில் போட்டியின் யுக்தி, லீடர்ஷிப் , ஆகியவற்றை பேசுவது வழக்கம் தான். அதுமட்டுமின்றி, சென்னை அணியில் அனைவரும் ரவீந்திர ஜடேஜாவுக்கு மிகப்பெரிய நம்பிக்கை எழுந்துள்ளது.”

“என்னதான் புதிய கேப்டனாக இருந்தாலும் ஜடேஜா அவரது வேலையை சிறப்பாக செய்துவருகிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை. இன்னும் சில போட்டிகளில் சென்னை அணி வெல்லும் நேரத்தில் நிச்சியமாக ஜடேஜாவுக்கு நல்ல கேப்டன் என்ற மனநிலை உருவாகும் என்று கூறியுள்ளார் மைக் ஹஸ்ஸி.

ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறதா ?? இல்லையா ?? தோல்விக்கான முக்கியமான காரணம் என்னவாக இருக்கும் என்பதை கீழே உள்ள COMMENTS பக்கத்தில் மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!