இந்திய அணியை சுலபமாக வென்று விடலாம் ; இதுதான் என்னுடைய பிளான் ; பாகிஸ்தான் வீரர் எச்சரிக்கை ;

ஆஸ்திரேலியா: வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இன்னும் சில தினங்களில் அனைத்து அணிகளும் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ள போகின்றனர். ஏனென்றால் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளதாக ஐசிசி கூறியுள்ளது.

இந்திய மற்றும் பாகிஸ்தான் :

மற்ற போட்டிகளை விட இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு பார்ப்பது வழக்கம். இது இன்று நேற்று இல்லை, பல ஆண்டுகளாகவே இப்படி தான் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை வென்றது பாகிஸ்தான்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆசிய கோப்பை டி-20 போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்ற இந்திய அணி தக்கபதிலடி கொடுத்தது. அதுமட்டுமின்றி, சூப்பர் 4 லீக் சுற்றில் மீண்டும் இந்திய அணியை வென்ற பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

அதனால் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை வெல்ல வேண்டுமென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அக்டோபர் 23ஆம் தேதி அன்று மெல்போர்ன் மைதானத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது.

இந்திய அணியை எச்சரித்த பாகிஸ்தான் பவுலர் :

மெல்போர்ன் மைதானம் தான் எனக்கு ஹாம் அதனால் இந்திய அணியை சுலபமாக வென்றுவிடலாம் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் பவுலர் ஹரிஸ் ரவூப். மேலும் இதனை பற்றி பேசிய அவர் ” எப்பொழுது இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையேயான போட்டி என்றால் அது மிகப்பெரிய அழுத்தம் இருக்கும்.”

“எந்த அணியாக இருந்தாலும் ஐசிசி உலகக்கோப்பை போட்டியிலும் அழுத்தம் ஏற்படும். கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் எனக்கு அப்படி தான் இருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டியில் எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. என்னுடைய பெஸ்ட் கொடுக்கவேண்டுமென்று தான் நினைத்தேன்.”

“நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சியமாக அவர்களுக்கு நான் சாதாரண பவுலராக இருக்கமாட்டேன். வரும் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட நான் ஆர்வகமாக இருக்கிறேன். ஏனென்றால் நான் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வருகிறேன். அதனால் என்னுடைய ஹாம் மைதானம் தான் மெல்போர்ன்.”

“அதனால் சின்ஹா மைதானத்தில் எப்படி விளையாட வேண்டுமென்று எனக்கு நன்கு தெரியும். அதனால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் எப்படி விளையாட வேண்டுமென்பதை இப்பொழுதில் இருந்தே நான் பிளான் செய்ய தொடங்கிவிட்டேன் என்று கூறியுள்ளார் ஹரிஸ் ரவூப்.”

இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை வெல்லுமா இந்திய அணி ?