நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரண்டாவது டி-20 போட்டிகள் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்தியா அணி பௌலிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை என்றாலும் 20 ஓவர் முடிவில் 164 ரன்களை எடுத்து 165 ரன்களை இந்தியாவுக்கு ஒரு சரியான இலக்காக இருந்தது.
ஓப்பனிங் பேட்டிங் செய்த கே.எல்.ராகுல் ஒரு ரன்கள் கூட அடிக்க முடியாமல் ஆட்டம் இழந்தார். அதனால் இந்தியா அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் இரண்டாவதாக களம் இறங்கிய இஷான் கிஷான் சிறப்பான ஆட்டம் கிரிக்கெட் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. 23 பந்தில் 56 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார்.
அதன்பின்னர் களம் இறங்கிய இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இந்தியா அணியை வெற்றிக்கு வழிவகுத்தார். அதனால் இரு டி-20 போட்டிகளில் தள ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் இரு அணிகளும். அடுத்த போட்டி நாளை அதே மைதானத்தில் நடைபெற இருக்கின்றன.
என்னுடைய ஆட்டம் நான் இவருக்கு தான் சமர்ப்பிக்க நெனைக்கிறேன் ; கண் கலங்கிய இஷான் கிஷான்
போட்டி முடிந்த பிறகு அவருக்கு பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு எல்லாம் பதிலளித்த இஷான் கிஷான் ; எனக்கு இந்த போட்டியின் போது மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு எனது பயிற்சியாளரின் தந்தை இறந்துவிட்டார். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
இந்த போட்டியை நான் எனது என்னுடைய பயிற்சியாளருக்கு சமர்ப்பணம் செய்கிறேன். என்னுடைய அப்பாவுக்குகாக நீ நிச்சயமாக அரைசதம் அடிக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார். நான் அதனை வெற்றிகரமாக செய்துள்ளேன். அதுமட்டுமின்றி என்னுடைய வெற்றிக்கு நான் என்னுடைய மும்பை இண்டிங்ஸ் அணியின் எனது டீம் நண்பர்களுக்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும். நான் இதனை சிறப்பாக விளையாடி உள்ளேன். மேலும் சிறப்பான ஆட்டத்தை வரும் போட்டிகளில் நான் அதனை விளையாட வேண்டும்.