ஹார்டிக் பாண்டிய ஒரு அதிரடியான வீரர் மட்டுமின்றி பௌலிங் பேட்டிங் செய்வதில் சரியான வீரர். ஏனென்றால் பல சிக்கலான நேரத்தில் பல போட்டிகளில் இறுதி நேரத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா அணியை வெற்றி பெற வைத்துள்ளார். அது ஒரு பக்கம் இருக்க ஐபிஎல் என்றாலே இந்தியா கிரிக்கெட் ரசிகர்ளுக்கு மிகவும் பிடித்த ஒன்று.
மும்பை இண்டிங்ஸ் அணியை சேர்ந்தவர் ஹார்டிக் பாண்டிய , ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். பல போட்டிகளில் கம்மியான பந்தில் அதிரடியாக விளையாடுவார். ஐபிஎல் போட்டிகளில் பல சிக்சர்க்கு சொந்தக்காரர் என்றே சொல்லலாம். இந்தியாவின் முக்கியமான ஆல் ரவுண்டர் என்றால் அது ஹார்டிக் பாண்டிய தான்.
நான் விளையாடும் அனைத்து விளையாடும் இவருக்கு சமர்பனம் ; ஹார்டிக் பாண்டிய
சமீபத்தில் ஹார்டிக் பாண்டிய மற்றும் குர்நல் பாண்டியவின் தந்தை மாரடைப்பால் காலம் ஆனார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடைய அப்பா எனக்கு ஹீரோ என்று கருத்தை பகிர்ந்துள்ளார். இனி நான் விளையாடும் அனைத்து போட்டிகளும் என்னுடைய தந்தைக்கு சமர்ப்பணம் என்று ஹார்டிக் பாண்டிய அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு இவரையும் படிக்க வைக்க மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள அவரது தந்தை மிகவும் கடினப்பட்டுள்ளார்.
இவர் கார்களுக்கு பைனான்ஸ் நடத்தி வந்துள்ளார். ஆனால் அதில் பல சிக்கல்கள் சந்தித்தால் அதனை விட்டுவிட்டு வேறு ஒரு ஊருக்கு சென்றுள்ளனர். பல கஷ்டங்களை சந்தித்த பாண்டியவின் அப்பா ,இவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் நல்ல ஒரு நிலைமை வந்த பிறகுதான் இவரது குடும்பம் ஒரு நல்ல நிலைமைக்கு வந்துள்ளனர்.