ஐபிஎல் போட்டியிலும் நான் இதைய தான் செய்யப்போகிறேன் ! விராட் கோலி அதிரடி முடிவு.

0

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து (5) டி-20 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இந்தியா அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. முதல் 4 டி-20 போட்டிகளில் தல இரு போட்டிகளில் வென்றது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர். நேற்று நடந்த போட்டியில் யார் வெல்கிறார்களோ? அவர்களே கோப்பையை கைப்பற்ற முடியும் என்ற நிலை இருந்தது.

நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கியா ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மிகவும் சிறப்பான தொடக்கத்தை இந்தியா அணிக்கு ஏற்படுத்தி கொடுத்தனர். இருந்தாலும் ரோஹித் சர்மா 34 பந்தில் 64 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார் .

அதன்பின்னர் களம் இறங்கிய சூரியகுமார் குமார் யாதவ் 17 பந்தில் 32 ரன்களை எடுத்து , எதிர்பாராத விதமாக சிக்சர் லைனில் ஜோர்டான் அசத்தலான முறையில் பந்தை கைப்பற்றினார். அதனால் சூரியகுமார் யாதவ் ஆடடம் இழந்தார். அதன்பின்னர் பேட்டிங் செய்த ஹர்டிக் பாண்டிய இந்தியா கேப்டன் கோலிக்கு நல்ல ஒரு துணையாக நின்று 20 ஓவர் முடிவில் இந்தியா அணி 224 ரன்களை எடுத்து. இதில் கோலி 52 பந்தில் 80 ரன்கள் மற்றும் ஹர்டிக் பாண்டிய 17 பந்தில் 39 ரன்கள் எடுத்துள்ளார்.

225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கியா இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் ஒரு ரன்கள் கூட அடிக்காமல் ஆட்டம் இழந்தார்.இதனால் இங்கிலாந்து அணிக்கு நல்ல ஒரு துவக்கம் அமையாமல் போகிவிட்டது என்று நினைத்த போது ஜோஸ் பட்லர் 52 ரன்களிலும் , மலன் 68 ரன்களை அதிரடியாக விளையாடி ஆட்டம் இழந்தனர்.

அதன்பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் யாரும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் பரிஸ்டோவ் 7 ரன்களிலும் , மோர்கன் 1 ரன்களிலும் ,பென் ஸ்டோக்ஸ் 12 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

அதனால் இங்கிலாந்து அணிக்கு ரன்களை எடுக்க முடியமால் போய்விட்டது. நிர்ணையக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 188 ரன்களை மட்டுமே எடுத்துள்ளதால். இந்தியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதனால் கோப்பையையும் கைப்பற்றியுள்ளது.

போட்டியிக்கு பின்னர் கோலி அளித்த பேட்டியில் ; நானும் விராட் கோலியும் நல்ல ஒரு தொடக்கத்தை இந்தியா அணிக்கு ஏற்படுத்தியுள்ளோம். அதனால் இதனை நான் ஐபிஎல் போட்டிகளிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாட போகிறேன் என்று இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here