ஐபிஎல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி …! அப்போ இந்த வருடமும் இல்லையா..?

0

ஐபிஎல் 2021: இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டி வருகின்ற ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். ஏனென்றால் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபுத்தி நாட்டில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றது.

ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தாக்கம் சற்று குறைவாக இருந்ததால் , ஐபிஎல் 2021 போட்டியை இந்தியாவில் நடத்தலாம் என்றும் மைதானத்தில் 50 சதவீத மக்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்போவதாக தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்துள்ளனர்.

Read More: இந்த இரு வீரர்களும் டி-20 அணியில் நிச்சியம் இருக்க வேண்டு ; சச்சின் டெண்டுல்கர் கருது… யார் அந்த வீரர்கள்..!

இப்பொழுது இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் முதல் மூன்று டி-20 போட்டியில் மைத்தனத்தில் 50 சதவீத மக்களை அனுமதி செய்தனர். ஆனால் இப்பொழுது மீண்டும் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனால் மக்கள் யாரும் மைதானத்தில் அனுமதி இல்லை என்று கூறினார். அதனால் கடந்த 3 மற்றும் 4வது டி-20 போட்டிகளில் மக்கள் யாரும் இல்லாமல் தான் போட்டியை நடத்தினார்.

இந்த சாதாரண போட்டிக்கே மக்கள் கூட்டம் மையத்தனத்தில் அலைமோதினார். ஐபிஎல் என்றாலே இந்தியாவில் அது திருவிழா தான். அதனால் மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். ஒருவேளை ஐபிஎல் போட்டியை பார்க்க மக்களை அனுமதித்தால் நிச்சியம் ஆபத்துதான் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

அதனால் முதலில் நாடாகும் சில போட்டிகளில் மக்கள் யாரும் அனுமதி இல்லை என்று பிசிசிஐ அதிரடியாக முடிவு செய்துள்ளனர். இப்பொழுது இருக்கும் சூழலை பார்த்தால் இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டியை மக்கள் யாரும் இல்லாமல் தான் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.

அப்படி ஒருவேளை நடந்தால் நிச்சியமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக தன இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஐபிஎல் 2021 முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோத உள்ளன, இந்த முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here