விராட் கோலி மற்றும் ஜோஸ் பட்லர் சண்டைக்கு என்ன காரணம் ?

நேற்று நடந்த இறுதி டி-20 போட்டியில் , டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இந்தியா அணியை சிறப்பான முறையில் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் இந்தியா அணியால் நிர்ணையக்கப்பட்ட 20 ஓவரில் 224ரன்களை எடுத்து இந்தியா அணி.

225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து வீரர்களுக்கு சரியான தொடக்கம் அமையவில்லை என்றே சொல்லலாம். இருந்தாலும் ஜோஸ் பட்லர் மற்றும் மலன் ஆகிய இருவரும் இங்கிலாந்து அணிக்கு நல்ல ரன்களை எடுத்து கொண்டு இருந்தனர்.

இந்திய அணியின் பௌலர் புவனேஸ்வர் வீசிய பந்தில் சிக்சர் அடிக்க முயற்சி செய்த ஜோஸ் பட்லர், பௌண்டரி லைனில் இருந்த ஹர்டிக் பாண்டிய அதனை கைப்பற்றி ஜோஸ் பட்லரின் விக்கெட்டை எடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணிக்கு நல்ல ஒரு விக்கெட் பறிபோனது என்றே சொல்லலாம்.

Read More: ஐபிஎல் போட்டியிலும் நான் இதைய தான் செய்யப்போகிறேன் ! விராட் கோலி அதிரடி முடிவு

அதன்பிறகு மலன் விக்கெட் இழந்தார். இதனால் இந்தியா மீண்டும் வெற்றிவாய்ப்பை உறுதி செய்தது. 20 ஓவர் முடிவில் 188 ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர். அதனால் டி-20 போட்டிக்கான கோப்பையை கைப்பற்றியது இந்தியா கிரிக்கெட் அணி. விராட் கோலி மற்றும் ஜோஸ் பட்லருக்கு இடையே சின்ன மோதல் போல் ஏற்பட்டது ? அது என்ன ?

இங்கிலாந்துக்கு அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை ஆடிக்கொண்டு இருந்தார். 34 பந்தில் 52 ரன்கள் எடுத்த நிலையில் பௌண்டரி லைனில் எதிர்பார்த்த விதமாக அவுட் ஆகிவிட்டார். அதனால் மனம் வேதனை அடைந்த அவர் ஏதோ சில வார்த்தைகள் பேசிவிட்டார்.

இது சாதாரணமான ஒன்றுதான் ஏனென்றால் அவுட் ஆனா விரக்தியில் இப்படியெல்லாம் நடப்பது தான். அதனை விராட் கோலி என்ன என்ன என்று கேட்டு கொண்டே சென்றுள்ளார். இதுதான் நடந்திருக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பரவலாக கருத்தை கூறி வருகின்றன.